Published:Updated:

சசிகலா தலைமையில் திருமணம்... மகள் நிச்சயதார்த்த விழா ஏற்பாட்டில் தினகரன்!

மணமகன் வீட்டில் தினகரன்
News
மணமகன் வீட்டில் தினகரன்

நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா சசிகலா முன்னிலையில் நடைபெற வேண்டும் என தினகரன் விரும்பினார்.

சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவது தாமதமாகிவருவதால், டி.டி.வி தினகரன் தன் மகள் ஜெயஹரிணியின் நிச்சயதார்த்த விழாவை எளிய முறையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். வரும் 11-ம் தேதி கும்பகோணம் சுவாமி மலையிலுள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது.

தினகரன் இல்லத்தில்
தினகரன் இல்லத்தில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசிக்கும் திருமணம் செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினர் தரப்பிலும் பேசி முடிவு செய்திருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போதே திருமண ஏற்பாடுகள் குறித்து தினகரன் சிறையிலிருக்கும் சசிகலாவிடம் தெரிவித்தார். மணமகன் குடும்பத்தினர் தஞ்சாவூரிலுள்ள பாரம்பர்யமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தச் சம்பந்தத்துக்கு உடனே பச்சைக்கொடி காட்டினார் சசிகலா.

 நிச்சயதார்த்த அழைப்பிதழ்
நிச்சயதார்த்த அழைப்பிதழ்

இதைத் தொடர்ந்து மணமகன் தந்தையான கிருஷ்ணசாமி வாண்டையார் தரப்பினர் பாண்டிச்சேரியிலுள்ள தினகரனின் பண்ணை வீட்டுக்குச் சென்று மணமகளுக்கு பூ, பொட்டு வைத்தனர். இதையடுத்து தினகரன் மற்றும் அவர் மனைவி அனுராதா உள்ளிட்டவர்கள் மணமகன் வீட்டுக்கு வந்து சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். அப்போது இருதரப்புக்குமான சம்மதத்தையும் உறுதிசெய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா சசிகலா முன்னிலையில் நடைபெற வேண்டும் என தினகரன் விரும்பினார். அதை மணமகன் தந்தையான கிருஷ்ணசாமி வாண்டையாரிடம் தெரிவிக்க, அவரும் சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிச்சயதார்த்த விழா ஏற்பாட்டில் அவசரம் காட்டவில்லை.

தினகரன்
தினகரன்

ஆனால், சசிகலா விடுதலையாவது தாமதமாகிவருவதால், திருமணத்தை சசிகலா தலைமையில் விமரிசையாக நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. இப்போதைக்கு நிச்சயதார்த்த விழாவை முக்கிய உறவினர்கள் கலந்துகொள்ள எளிய முறையில், அதேநேரத்தில் பெரிய இடத்து நிகழ்ச்சி எப்படியிருக்குமோ அது மாதிரி விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தினகரன் குடும்பத்தினர் உற்சாகமாக செய்துவருகின்றனர்.

தினகரன் தரப்பில், ஓலைச்சுவடி வடிவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அழைப்பிதழ்களை அச்சடித்து, மிக முக்கிய மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு கொடுத்துவருகின்றனர். மணமகன் தரப்பிலும் அழைப்பிதழ்களைக் கொடுத்து உறவினர்களை அழைக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. வரும் 11-ம் தேதி சுவாமிமலை அருகேயுள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நிச்சயதார்த்த விழா நடக்கவிருப்பதாக தினகரன் தரப்பில் தெரிவித்தனர்.

 சசிகலா
சசிகலா

இது குறித்து தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ``தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பம் என அனைவராலும் அறியப்பட்டது பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம். இவருடைய மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது தெற்கு மாவட்டத் தலைவராகவும் இருக்கிறார்.

இவருடைய மகன் ராமநாதன் துளசி அய்யா தற்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். தன் ஒரே செல்லமகளான ஜெயஹரிணியை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என தினகரன் நினைத்தார்.

இரு தரப்பு குடும்பத்தினர்
இரு தரப்பு குடும்பத்தினர்

தொடக்கத்தில் மணமகன் தரப்பில், தன் மகளை பெண் கேட்டு அணுகியபோது தினகரன் உடனே அதை சசிகலாவிடம் தெரிவித்தார். துளசி அய்யா மீது பெரும் மதிப்புகொண்ட சசிகலா இரட்டிப்பு சந்தோஷம் அடைந்ததுடன், உடனே அதற்குச் சம்மதம் தெரிவிக்க, அடுத்தடுத்த நகர்வுகள் நடந்து முடிந்தன.

சசிகலா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்டதால், அவர் தலைமையிலேயே நிச்சயதார்த்த விழாவை நடத்தவும் முடிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது அதற்கான வாய்ப்புகள் கைகூடவில்லை என்பதை உணர்ந்த தினகரன், நிச்சயதார்த்த விழாவை எளிமையாக நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டார்.

விழாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால், நிகழ்ச்சி தடபுடலாகத்தான் இருக்கும். தை மாதத்தில் திருமணத்தை நடத்துவதற்கான நாள் குறிக்கப்பட உள்ளது. அதற்குள் நல்ல சேதி வருவதுடன் சசிகலாவும் நிச்சயம் விடுதலையாகிவிடுவார். அவர் தலைமையில் திருமணம் நடைபெறும்’’ என உற்சாகமாகத் தெரிவித்தனர்.