Published:Updated:

`தேனியில் ஒரு தொகுதி..!’ - டி.டி.வி.தினகரன் பேட்டியும், கள நிலவரமும்!

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

`ஆர்.கே நகர் மற்றும் தேனி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்’ என சென்னையில் டி.டி.விதினகரன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார். தேனி மாவட்ட கள நிலவரம் எப்படியிருக்கிறது எனப் பார்க்கலாம்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்த சசிகலாவுக்கு, அ.ம.மு.க-வினரும் அ.தி.மு.க-வின் சில நிர்வாகிகளும் வரவேற்பு கொடுத்தனர். சசிகலாவை வரவேற்கச் சென்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இன்று அதிகாலை சென்னை வந்த சசிகலா, ராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர் இல்லத்துக்குச் சென்று எம்.ஜி.ஆர் படம் மற்றும் சிலைக்கு மரியாதை செய்தார். பிறகு தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் வீட்டுக்குச் சென்றார்.

தேனி: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை... உருவானது நாட்டின் 51-வது புலிகள் காப்பகம்!
சசிகலா
சசிகலா

சசிகலாவின் சென்னைப் பயணத்தின்போது உடன் இருந்த டி.டி.வி.தினகரன், இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்களே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், ``அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள்தான் ஸ்லீப்பர் செல்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அ.தி.மு.க நிர்வாகிகள்கூட ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``ஆர்.கே.நகர், தேனி மாவட்டத்தின் ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்
ஈ.ஜெ.நந்தகுமார்
சசிகலா வருகை: ஓ.பி.எஸ். தொடர் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி டென்ஷன்

தினகரனின் பேட்டி, தேனி மாவட்ட அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. விவாதங்களையும் தினகரன் பேட்டி உருவாக்கியிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், கம்பம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. போடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். கம்பம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, அ.தி.மு.க-வின் எஸ்.டி.கே ஜக்கையன் இருக்கிறார். பெரியகுளம் (தனி) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வின் சரவணனனும், ஆண்டிபட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வின் மகாராஜனும் இருக்கிறார்கள். ஆக, மாவட்டத்தின் இரண்டு தொகுதிகள் அ.தி.மு.க-வின் வசமும், இரண்டு தொகுதிகள் தி.மு.க-வின் வசமும் இருக்கின்றன.

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.
சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.

தேனி மாவட்டத்தின் ஒரு தொகுதியில் போட்டியிடவிருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது, ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிவைத்துதான் எனக் கூறும் அ.ம.மு.க நிர்வாகிகள், `போடி தொகுதியில் மீண்டும் போட்டிபோடும் எண்ணத்திலுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, தினகரன் போட்டியிடலாம் அல்லது அவரது சமுதாய வாக்குகள் அதிகமுள்ள ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடலாம். எது எப்படியாக இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தேர்தல் நேரத்தில் கடுமையான அழுத்தம் கொடுக்க தினகரன் திட்டமிட்டிருக்கிறார் என்பதையே அவரது பேட்டி வெளிப்படுத்துகிறது’ என்கின்றனர்.

கள நிலவரம்:

தினகரன், போடி தொகுதியைத் தேர்ந்தெடுத்தால், ஓ.பன்னீர்செல்வத்துக்கும், தினகரனுக்கும் நேரடிப் போட்டி இருக்கும். ஒருவேளை, ஆண்டிபட்டி தொகுதியை தினகரன் தேர்ந்தெடுத்தால், தனது சொந்த மாவட்டத்தில் தினகரனை வெற்றிபெறவிடக் கூடாது என்ற அழுத்தம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வந்துவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குச் சென்ற தங்க தமிழ்ச்செல்வனும் களத்தில் இறங்கவிருக்கிறார். இப்போதுவரை, ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போடி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் என்றே கூறப்படுகிறது. அப்படியென்றால், தினகரன், ஓ.பி.எஸ்., தங்க தமிழ்ச்செல்வன் என மும்முனைப் போட்டி நிலவும்.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வனைப் பொறுத்தவரை, தினகரனோ, ஓ.பன்னீர்செல்வமோ யாரையாவது ஒருவரை வீழ்த்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். தினகரன், ஆண்டிபட்டியைத் தேர்தெடுத்தால், அவரை எதிர்த்துப் போட்டியிட தங்க தமிழ்ச்செல்வன் ஆர்வம் காட்டலாம். தனது இளைய மகன் ஜெயபிரதீப்பை தினகரனுக்கு எதிராக ஆண்டிபட்டியில் களம் இறக்க ஓ.பி.எஸ் திட்டமிடலாம். எது எப்படியோ, தேனி மாவட்டம், வரும் சட்டமன்றத் தேர்தலில் பரபரப்பாகவே காட்சியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா
அடுத்த கட்டுரைக்கு