Published:Updated:

அமமுக பொதுக்குழு ஓவர்... டிடிவி தினகரனின் அடுத்த நகர்வு என்ன?!

டிடிவி தினகரன்

`அமமுக பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதால் டிடிவி தினகரன் மகிழ்ச்சியில் இருக்கிறார். முழுக்க முழுக்க கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தினகரன் ஈடுபட உள்ளார். அதற்கான திட்டமிடலே முழுவதுமாக நடந்து வருகிறது’ என்கிறார்கள்.

அமமுக பொதுக்குழு ஓவர்... டிடிவி தினகரனின் அடுத்த நகர்வு என்ன?!

`அமமுக பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதால் டிடிவி தினகரன் மகிழ்ச்சியில் இருக்கிறார். முழுக்க முழுக்க கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தினகரன் ஈடுபட உள்ளார். அதற்கான திட்டமிடலே முழுவதுமாக நடந்து வருகிறது’ என்கிறார்கள்.

Published:Updated:
டிடிவி தினகரன்

வானகரம் ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் ஜூன் 23-ம் தேதி களேபரத்துடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஓ.பன்னீர் செல்வத்தை அவமானப்படுத்தும் வகையில் அந்த பொதுக்குழு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி மீண்டும் ஒரு பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரிய விவாதத்துக்குள்ளான பொதுக்குழுவாக இது நடந்து முடிந்தது.

டிடிவி-பொதுக்குழு
டிடிவி-பொதுக்குழு

இந்தநிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு சவால் விடும் வகையில் அதே ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் தன்னுடைய கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தி முத்திருக்கிறார் டிடிவி தினகரன். அமமுக பொதுக்குழு பற்றிய பேச்சுதான் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே, பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தியுள்ள டிடிவி தினகரனின் அடுத்த பிளான் என்ன என்பது குறித்து அமமுக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தோம்,

தினகரன் - சசிகலா
தினகரன் - சசிகலா

``அமமுக பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதால் தலைவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். கொரோனா பரவலுக்கு பின்னர் பொதுவெளியில் நடத்தப்படும் ஒரு பொதுக்குழுவாகவே இது அமைந்தது. எனவே, ஏற்பாடுகள் அனைத்தும் லக்கி முருகன், கரிகாலனுக்கு கொடுக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல் சிறப்பாக பொதுக்குழு நடந்ததால் இரவு லக்கி முருகன், கரிகாலனை அழைத்து தினகரன் பாராட்டினார். இதேபோல், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு மேடையில் மூத்த நிர்வாகிகள் பலரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்கள்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

பொதுக்குழு முடிந்த பின்னரும், 5 வருடங்களாக கட்சி நாம் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறவில்லை. எனவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். டிடிவி தினகரனும் இதையே விரும்புகிறார். இதுகுறித்து அடுத்த வாரம் சில மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாஜக-வுடன் கூட்டணி வைப்பது குறித்து தினகரன் தான் அறிவிப்பார். முழுக்க முழுக்க கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தினகரன் ஈடுபட உள்ளார். அதற்கான திட்டமிடலே முழுவதுமாக நடந்து வருகிறது. சசிகலா படத்தை பொதுக்குழுவில் புறக்கணித்தது குறித்து பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள், அதிமுக-வை கைப்பற்ற சசிகலா சட்டரீதியாக முயற்சி எடுத்து வருவதாலேயே அவரின் படங்கள் பொதுக்குழுவில் இடம்பெறவில்லை.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

மேலும், கழக சட்ட விதி எண்களின் படி நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட பொதுச்செயலாளர், தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளுக்கான பதவிக்காலம் ஏப்ரல் 2023-ம் ஆண்டு நிறைவடைகிறது. துணைத் தலைவராக உள்ள அன்பழகனை தலைவர் பதவிக்கு கொண்டு வருவது குறித்தும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தருவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது" என்றனர்.