Published:Updated:

சசிகலா: ஜெயலலிதா வழிப்பட்ட கோயிலில் சிறப்பு பூஜை... நிர்வாகிகள் சந்திப்புக்கு தடைபோட்ட தினகரன்!

திட்டை குரு கோயிலில் வழிபட்ட சசிகலா

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை வேகமெடுத்திருக்கும் நிலையில், சசிகலா கோயில் கோயிலாகச் சென்று சிறப்பு பூஜைகள் நடத்திவருகிறார்.

சசிகலா: ஜெயலலிதா வழிப்பட்ட கோயிலில் சிறப்பு பூஜை... நிர்வாகிகள் சந்திப்புக்கு தடைபோட்ட தினகரன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை வேகமெடுத்திருக்கும் நிலையில், சசிகலா கோயில் கோயிலாகச் சென்று சிறப்பு பூஜைகள் நடத்திவருகிறார்.

Published:Updated:
திட்டை குரு கோயிலில் வழிபட்ட சசிகலா

தஞ்சாவூரில் தங்கியிருந்தபடி கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கியக் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டுவருகிறார் சசிகலா. தஞ்சாவூரில் சசிகலா இருக்கும்போது அமமுக நிர்வாகிகள் அவரைச் சந்திப்பது வழக்கம். தற்போது சசிகலாவை யாரும் சென்று சந்திக்கக் கூடாது என அமமுக-வினருக்கு டி.டி.வி.தினகரன் மறைமுக உத்தரவிட்டுள்ளாராம். அதனால் யாருமே சசிகலாவைச் சந்திக்கவில்லை எனவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகு, கேது பெயர்ச்சியில் பக்தர்களோடு பக்தராக சசிகலா
ராகு, கேது பெயர்ச்சியில் பக்தர்களோடு பக்தராக சசிகலா

அதிமுக-வைத் தன் கைக்குள் கொண்டுவந்து விட வேண்டும் என சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். ஓபிஎஸ் அவ்வப்போது சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிவந்தாலும் சசிகலா அவரை நம்பத் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ்-ஸின் தம்பி ஓ.ராஜா வெளிப்படையாகவே சசிகலாவைச் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். ஆனாலும் சசிகலா எண்ணம் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படவில்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தென்மாவட்டத்தில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார் சசிகலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 17-ம் தேதி தஞ்சாவூர் வந்தவர், அருளானந்த நகர் அருகேயுள்ள பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கியிருந்தபடி பல்வேறு முக்கியக் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து சசிகலாவும் 2000-ம் ஆண்டில் கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்குச் சென்று நிகும்பலா யாக பூஜை நடத்தி வழிபட்டார்.

சசிகலா
சசிகலா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரசித்திபெற்ற பிரத்தியங்கராதேவி கோயிலுக்குச் சென்றவர், தற்போது மீண்டும் சென்று வழிப்பட்டுள்ளார். அதேபோல் ராகு, கேது பெயர்ச்சிக்காக ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று அவர் வழிப்பட்டிருப்பதும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை வேகமெடுத்திருக்கும் நிலையில், சசிகலா கோயில் கோயிலாகச் சென்று சிறப்பு பூஜைகள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து மேலும் விசாரித்தபோது, ``சசிகலா ஆன்மிகம், ஜோதிடம் இரண்டிலும் மிகுந்த நம்பிக்கைகொண்டவர். சசிகலாவின் ஜாதகப்படி அவர் சரிவைச் சந்திக்கக்கூடிய நிலை தொடரும். அத்துடன் ராகு, கேது பெயர்ச்சி சசிகலாவுக்கு நல்ல பலன்களைத் தராது. மேலும் சிக்கல் வராமல் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள முக்கியக் கோயில்களுக்கு சென்று வழிபட வேண்டும் என சசிகலாவுக்கு நெருக்கமான ஜோதிடர்கள் தரப்பு தெரிவித்துள்ளதாம்.

சசிகலா
சசிகலா

அதன்படி கோயில்களுக்குச் சென்று வருகிறார். கும்கோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, நவகிரக ஸ்தலமான சூரியனார் கோயில், சுக்கிரன் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். அப்போது நினைத்த காரியம் நடக்கவும், வளர்ச்சிக்கான தடை நீங்கவும் வேண்டிக்கொண்டாராம். இதைத் தொடர்ந்து திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சிக்காக நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்துகொண்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2000-ம் ஆண்டில் சசிகலாவுடன் வந்து அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம் நடத்தி வழிப்பட்டார். எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த காரியம் தங்கு தடை இல்லாமல் நிறைவேறவும், இழந்த சாம்ராஜ்யத்தை மீட்கும் வல்லமை அருளும் சிறப்புமிக்க கோயிலான பிரத்தியங்கரா தேவி கோயிலிலும் வழிபாடு நடத்தியிருக்கிறார்.

திட்டை கோயிலில் சசிகலா
திட்டை கோயிலில் சசிகலா

தொடர்ந்து குரு ஸதலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்றவர் விநாகயர் சந்நிதிக்கு முன் செதறு தேங்காய் உடைத்த பின்னர் குரு சந்நிதிக்குச் சென்று வழிபட்டார். தொடர்ந்து திருச்சியிலுள்ள முக்கியக் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார்.

கடந்த தீபாவளி சமயத்தில் தஞ்சாவூருக்கு வந்து ஒரு வாரம் வரை தங்கியிருந்த சசிகலாவை அமமுக நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாகச் சந்தித்தனர். அப்போது ``கிராமம் கிராமமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லவிருக்கிறேன். நீங்க எதிர்பார்த்தது நடக்கும் நம்பிக்கையோடு இருங்க” என்று சொன்னார். ஆனால் சொன்னபடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. தற்போது தஞ்சாவூரில் தங்கியிருக்கும் அவர் நிர்வாகிகளைச் சந்திப்பதாக திட்டம் இருந்தது.

சாமி தரிசனம் செய்த சசிகலா
சாமி தரிசனம் செய்த சசிகலா

ஆனால் சில மாதங்களாகவே சசிகலா, தினகரனுக்கு இடையே மனகசப்பு ஏற்பட்டு நீண்டுகொண்டிருக்கிறது. தன் கணவர் ம.நடராசன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் சசிகலா மட்டும் தனியாகச் சென்று அஞ்சலி செலித்தினார். ஓ.ராஜாவும் சசிகலாவுடன் இருந்தது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தனியாகச் சென்ற தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

இவையெல்லாம் இருவருக்குமான கருத்து வேறுபாடு தொடர்வதை வெளிப்படையாகக் காட்டுகின்றன. இந்நிலையில் சசிகலாவை அமமுக நிர்வாகிகள் யாரும் சந்திக்கக் கூடாது என தினகரன் அறிவுறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தஞ்சாவூர் வந்து ஐந்து தினங்கள் தாண்டிய நிலையிலும் இதுவரை யாரும் சென்று சசிகலாவைச் சந்திக்கவில்லை. போகப் போக சசிகலா தன்னுடைய அடுத்த நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. தினகரன் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட சசிகலா முடிவெடுத்திருப்பதாகவும், அப்போதுதான் தன்னால் அதிமுக-வுக்குள் செல்ல முடியும்” எனக் கருதுவதாகவும் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism