Published:Updated:

`எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்று இருக்கிறது'- தி.மு.க செயல்பாட்டை விமர்சிக்கும் டி.டி.வி!

தி.மு.க செயல்பாட்டை விமர்சித்து டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``தி.மு.க-வை நம்பி யாரும் போராட்டத்துக்குச் செல்ல மாட்டார்கள், இலங்கைப் போரின்போது தி.மு.க-வின் குழப்பமான நடவடிக்கை மக்களுக்குத் தெரியும்'' என்று, குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தி.மு.க நடத்தவுள்ள போராட்டத்தை விமர்சித்தார் டி.டி.வி.தினகரன்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொலை செய்யப்பட்ட அ.ம.மு.க நிர்வாகி அசோகன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல மதுரை வந்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``எங்கள் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்ட அசோகன் கொலை வழக்கில் காவல்துறை நியாயமான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

தமிழகம் முழுவதிலும் அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து வரும் எதிர்ப்புகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வோம். அடுத்த தேர்தலில் எங்களுக்கு பொதுச் சின்னம் நிச்சயம் கேட்போம்.

 டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

குடியுரிமை மசோதாவில் மத்திய அரசு தாயுள்ளத்தோடு திருத்தம் செய்து இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். தி.மு.க-வை நம்பி யாரும் போராட்டத்துக்குச் செல்ல மாட்டார்கள், இலங்கை இறுதிப்போரின்போது தி.மு.க-வின் குழப்பமான நடவடிக்கை மக்களுக்குத் தெரியும். எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்ற அடிப்படையில் தி.மு.க செயல்படுகிறது.

மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மசோதாவில் திருத்தம் கொண்டுவரும் என நம்புகிறோம். மசோதாவுக்கு எதிரான வழக்கில் நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். அ.ம.மு.க-வில் பதவியில் இல்லாதவர்களையும் பதவியில் இருப்பவர்களையும் அச்சுறுத்தி அ.தி.மு.க-வில் இணைத்துவருகின்றனர்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்
ஈ.ஜெ.நந்தகுமார்

ஈ.பி.எஸ் ஆட்சி லாபம் ஈட்டக் கூடிய கம்பெனி போல உள்ளது. இந்த ஆட்சிக்கு அடுத்த தேர்தலில் முடிவு கிடைக்கும்'' என்றார்.