Published:Updated:

``ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்ததுபோல் இருக்கிறது" - டி.டி.வி.தினகரன் காட்டம்

டி.டி.வி.தினகரன்

``ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பொய்யான பிரசாரத்தை தி.மு.க தொடங்கியது. அதை ஓ.பி.எஸ் கையில் எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது." - டி.டி.வி.தினகரன்

``ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்ததுபோல் இருக்கிறது" - டி.டி.வி.தினகரன் காட்டம்

``ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பொய்யான பிரசாரத்தை தி.மு.க தொடங்கியது. அதை ஓ.பி.எஸ் கையில் எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது." - டி.டி.வி.தினகரன்

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

``ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்ததுபோல இருக்கிறது. இதை சி.பி.ஐ விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும். இதில் அரசியல் இருக்கிறது" என தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் டி.டி,.வி.தினகரன்
தஞ்சாவூரில் டி.டி,.வி.தினகரன்

அ.ம.மு.க-வின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜ்மோகன் மறைவையொட்டி தஞ்சாவூரிலுள்ள அவரின் குடும்பத்தினருக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தினகரன், ``சட்டமன்றத்தில் எதையும் முடிவுசெய்கிற அதிகாரம் சபாநாயகருக்குத்தான் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி கம்பெனிக்கும் அது தெரியும்.

மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும் நிலையில், நாற்காலிக்காகத் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது ஓர் அரசியல்வாதியாக எனக்கு வருத்தமளிக்கிறது. நான் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர். எனக்கு முன்னிருக்கையில் சீட் வேண்டும் எனக் கேட்டேன். அதற்கான முடிவெடுக்கப்படாமலேயே நான்கரை வருடங்கள் முடிந்துவிட்டன. முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்குத்தான் இருக்கிறது. அதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது எனத் தெரிந்தும் எனர்ஜியை வேஸ்ட் செய்திருக்கின்றனர்.

போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

துாத்துக்குடிச் சம்பவம் நடந்தபோது பழனிசாமிதான் முதல்வராக இருந்தார். அவர்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நிச்சயமாக தமிழ்நாடு அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்கும். 13 பேரைக் குருவியைப்போல் சுட்டுக் கொன்றதற்கு காரணமானவர்கள் முதல்வராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீதிபதியின் அறிக்கையும் அதைத்தான் சொல்வதால், தமிழ்நாடு அரசும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதான் என்பது அனைவருக்கும் தெரியும். சசிகலாவும் அறிக்கை குறித்து பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதி தயாரித்த அறிக்கைபோல இருக்கிறது. உண்மை என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். இந்த அறிக்கையைத் தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பார்ப்போம். அரசியல்ரீதியாகத்தான் இந்த ஆணையமே அமைக்கப்பட்டது. இதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

ஸ்டாலின், ஓ.பி.எஸ் சந்தித்துக்கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏதோ போகிறபோக்கில் கொளுத்திப்போடுகிறார் எனத் தோன்றுகிறது. ஆட்சி அதிகாரம், பண பலம் இருந்ததால் ஆட்டம் போட்டார். தற்போது பயத்தில் இதுபோல் செயல்படுகிறார். சந்தித்துக்கொண்டதற்கு சாட்சி இருக்கிறதா என ஓ.பி.எஸ் சேலஞ்ச் செய்கிறார். அதை எதிர்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பொய்யான பிரசாரத்தை தி.மு.க தொடங்கியது. அதை ஓ.பி.எஸ் கையில் எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது. எத்தனை அறிக்கைகள் கொடுத்தாலும் உண்மை அதுதான். அறிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வார்கள்.

ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

நீதிமன்றத்தில் இந்த ஆணையத்தின் அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். டாக்டர்கள் அந்த நேரத்தில் எது சரியானதோ, அதைச் செய்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மிகப்பெரிய வல்லுநர்கள். அவர்களையெல்லாம் அவமதிக்கும் வகையில் இந்த அறிக்கை இருக்கிறது. இதை சி.பி.ஐ விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும். இந்த அறிக்கையில் அரசியல் இருக்கிறது” என்றார்.