Published:Updated:

``துரோக எண்ணம் கொண்டவர்கள் நல்ல விஷயத்துக்கு ஒத்துவர மாட்டார்கள்” - டி.டி.வி.தினகரன் காட்டம்

டி.டி.வி.தினகரன்

``ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அமைச்சராக்க நினைத்தார், அதை சசிகலா மறுத்துவிட்டார் என்பது குறித்துக் கேட்கிறார்கள். என்னை பத்து ஆண்டுகள் அம்மா கட்சியைவிட்டு விலக்கிவைத்திருந்ததால் எனக்கு எதுவும் தெரியாது” என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

``துரோக எண்ணம் கொண்டவர்கள் நல்ல விஷயத்துக்கு ஒத்துவர மாட்டார்கள்” - டி.டி.வி.தினகரன் காட்டம்

``ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அமைச்சராக்க நினைத்தார், அதை சசிகலா மறுத்துவிட்டார் என்பது குறித்துக் கேட்கிறார்கள். என்னை பத்து ஆண்டுகள் அம்மா கட்சியைவிட்டு விலக்கிவைத்திருந்ததால் எனக்கு எதுவும் தெரியாது” என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

``அதிமுக-விலிருந்து பிரிந்தவர்கள் இணைந்து அனைவரும் இணக்கமாகச் செயல்பட்டால்தான், தீயசக்தியான தி.மு.க-வை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற முடியும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில் சில துரோகிகள், துரோக சிந்தனைகொண்டவர்கள் திருந்தினால் மட்டுமே அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும்” என தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன்
தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க கொடி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``சசிகலா, நான் உட்பட பிரிந்து சென்றவர்கள் இணைந்து இணக்கமாகச் செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியதை ஏற்கெனவே நான் வரவேற்றிருக்கிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேசமயம் சில மேதாவிகள், சுவாசமே துரோகமாகக்கொண்டவர்கள், நல்ல விஷயங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள். அனைவரும் இணக்கமாகச் செயல்பட்டால்தான், தீயசக்தியான திமுக-வை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற முடியும் என்ற உயரிய நோக்கத்தில் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன்.

பன்னீர் - எடப்பாடி
பன்னீர் - எடப்பாடி

அதேநேரத்தில் சில துரோகிகள், துரோக சிந்தனைகொண்டவர்கள் திருந்தினால் மட்டுமே இவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோதும், என்னை வெளியேற்றிய பிறகும் அவர்களுடன் வைத்திலிங்கம் இருந்திருக்கிறார். அதனால் அங்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் அவருக்குத் தெரியும். அதனால் `எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் குறித்து நேரம் வரும்போது கூறுகிறேன்’ என வைத்திலிங்கம் கூறியிருக்கிறார். அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் ஓர் அணிலைப்போல் செயல்படும்.

சமூகநலத் திட்டங்கள் மக்களுக்கு நல்லவை, அதேநேரத்தில் ஆட்சிக்கு வருவதற்காக, மக்களை ஏமாற்றும்விதமாக பல்வேறு இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன்.

தினகரன்
தினகரன்

தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நம்பி, அதனால் ஏற்பட்ட பெரிய எதிர்பார்ப்பில் மக்கள் தி.மு.க-வை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். ஆனால், மக்களை ஏமாற்றும்விதமாக தி.மு.க செயல்படுகிறது. அதற்கான பலனை தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் அனுவிக்கும்.

`ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை அமைச்சராக்க நினைத்தார், அதை சசிகலா மறுத்துவிட்டார்’ என்ற தகவல் குறித்துக் கேட்கிறீர்கள். என்னை பத்து ஆண்டுகள் அம்மா கட்சியைவிட்டு விலக்கிவைத்திருந்ததால் எனக்கு எதுவும் தெரியாது.

அ.ம.மு.க-வுக்கும் எனக்கும் அரசியல்ரீதியாக யாருடனும் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிசாமியைப் பொறுத்தவரையில் அவருடைய குணாதிசயங்களைத்தான் கண்டிக்கிறேன். தனிப்பட்ட விரோதம் கிடையாது. மக்களின் நலம்தான் எங்களுக்கு முக்கியம். 2023 இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வோம். அ.தி.மு.க-வில் பிரிந்தவர்கள் இணையட்டும். அத்தைக்கு மீசை முளைக்கட்டும்... பிறகு ஒற்றைத் தலைமை குறித்துப் பேசலாம்.

தினகரன்
தினகரன்

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கும்போது இருந்த சட்ட திட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்புதான் சரியானது என்பதால் அந்தத் தீர்ப்பே உச்ச நீதிமன்றம் வரை தொடரும் என என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி திருந்த வேண்டும். யார், எந்தத் தவறு செய்தாலும் மன்னித்துவிடலாம். ஆனால் செய் நன்றியை மறந்து நம்பிக்கை துரோகம் செய்வது என்பது அருவருக்கத்தக்க குணாதிசயம். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. இறைவனே தடுக்க நினைத்தாலும் அதற்கான தண்டனை கிடைக்கும். வருங்கால அரசியலில் அதற்கு மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள்” என்றார்.