Published:Updated:

``அதிமுக-வை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்!” - டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்

``கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். அதிமுக-வை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்" என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

``அதிமுக-வை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்!” - டி.டி.வி.தினகரன்

``கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். அதிமுக-வை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்" என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

ராமநாதபுரம் மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் முருகன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் வராது. மக்கள் ஏமாறுவர்கள், திமுக ஆட்சி என்றாலே தமிழகத்துக்கு இருண்ட காலம் என்பது வரலாறு.

திமுக ஆட்சி தவறான பாதையை நோக்கிச் செல்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மாபெரும் தோல்வியை திமுக ஆட்சியாளர்கள் சந்தித்துள்ளனர்” என்றார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொடநாடு கொலை வழக்கில் சசிகலாவிடம் நடைபெறும் விசாரணை குறித்த கேள்விக்கு தினகரன் பதில் அளிக்கையில், ``ஜெயலலிதா விரும்பிச் சென்று வந்த இடம் கொடநாடு. கொடநாடு கொலை வழக்கில் கொலையாளிகளை, உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு கைதுசெய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சி என்பதற்காக எல்லாவற்றிலும் ஆளுங்கட்சியைக் குறை சொல்லவேண்டியதில்லை" என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து சித்திரை திருவிழாக் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மரணம் தொடர்பான கேள்விக்கு, ``அனைத்திலும் அரசியல் செய்யவேண்டியதில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

அதிமுக குறித்த கேள்விக்கு, "அதிமுக-வைக் கைப்பற்றுவது என்பது யானைப்படை குதிரைப்படையோடு சென்று கைப்பற்றுவது அல்ல. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக-வை மீட்டெடுப்போம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற அதிமுக-வை மீட்டெடுப்போம். கடந்தகாலத் தேர்தல் தோல்விகளைக் கடந்து, தமிழக மக்களின் ஆதரவோடு அதிமுக-வை மீட்டெடுக்கும் பணிகளைச் செய்கிறோம்" என்றார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

திரைத்துறையினர் பாஜக-வுக்கு ஆதரவாகப் பேசுவது குறித்த கேள்விக்கு, "பொதுவாக சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆளுங்கட்சியாக இல்லையென்றால் எதிராக இருப்பார்கள். அதற்கு சினிமா கலைஞர்களும் விதிவிலக்கு அல்ல" என்றவர், சசிகலா குறித்த கேள்விக்கு, "நாங்கள் ஜனநாயகரீதியாக அதிமுக-வை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம். அதிமுக-வை மீட்டெடுக்கத்தான் அமமுக. சின்னம்மா ஜனநாயகவழியில் சட்டப் போராட்டம் நடத்திவருகிறார். தேர்தலில் வெற்றிபெற்று சசிகலாவை, பொதுச்செயலாளர் ஆக்குவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சின்னம்மா சட்டப் போராட்டம் நடத்தி மேல்மூறையீடு செய்வார். அ.ம.மு.க தொண்டர்கள் கொள்கைப் பிடிப்போடு எங்களிடம் இருக்கின்றனர், சுயநலத்துக்காகச் சிலர் கட்சி மாறியிருக்கலாம். எத்தனையோ தொண்டர்கள் இன்னும் கட்சியில் அப்படியே உள்ளனர்.

இது அரசியல் இயக்கம். கம்பெனி இல்லை. சுவாசம் உள்ளவரை அதிமுக-வை மீட்டெடுக்க நானும் தொண்டர்களும் முயல்வோம். வாரிசு அரசியல் எந்தக் கட்சியிலும் இல்லை. அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக-வை மீட்டெடுத்து வாரிசு அரசியலைச் சரிசெய்வோம். தமிழகத்திலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் மகிழ்ச்சி" என்றார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

முன்னதாக நேற்று இரவு மதுரை வந்தவர் விமான நிலையத்தில் பேசும்போது, "கொடநாடு கொலை வழக்கில் காவல்துறையினர் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்தால் மகிழ்ச்சி. விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு அளிப்பார்" என்றும், "ஆளுநர் தமிழக பிரச்னையில் காலம் தாழ்த்துவதாகக் கூறி அவருக்கு எதிராகப் போராடுவது சரி. ஆனால், அறவழியை மீறிப் போராடுவது சரியல்ல. ஆளுநர் செல்லும் வழியில் அறவழியை மீறிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism