Published:Updated:

``மேடையில் தலைப்பாகை அணிபவர்களெல்லாம் சர்தார் ஆகிவிட முடியாது'' - மோடியை விமர்சித்த பிரியங்கா!

கெஜ்ரிவால் - மோடி

`மேடையில் தலைப்பாகை அணிபவர்களெல்லாம் சர்தார் ஆக முடியாது’ எனப் பிரதமர் மோடியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் விமர்சனம் செய்துள்ளார் பிரியங்கா காந்தி.

117 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனால், அங்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ``பிரதமர் நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் பஞ்சாப்புக்கு வந்தால் மேடையில் தலைப்பாகை அணிந்துகொள்கின்றனர். மேடையில் தலைப்பாகை அணிவதால் அவர்கள் இருவரும் சர்தார் ஆகிவிட முடியாது. பஞ்சாப் மாநிலம், பஞ்சாப் மக்களுக்குச் சொந்தமானது. இந்தத் தலைப்பாகையின் கடின உழைப்பையும் தைரியத்தையும் பற்றி நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. பஞ்சாப்பில் முதல்வர் சன்னியும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் வளர்ச்சியைக் கொண்டுவருவார்கள் எனப் பொதுமக்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது" என்றார்.