Published:Updated:

``பிரசங்கிப்பதற்கு முன் நீங்கள் அதைச் செய்யுங்கள்''- கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த நாராயணசாமி!

நாராயணசாமி
நாராயணசாமி

கிரண்பேடியின் புகாருக்கு பதிலடி கொடுக்கும்வகையில் முதல்வர் நாராயணசாமி இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க புதுச்சேரி டிஜிபியிடம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி போட்டியிடும் கட்சிகள் நேற்று இறுதிக் கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கிரண்பேடி
கிரண்பேடி

இதில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் முதல்வர் நாராயணசாமி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். இது தொடர்பான செய்திகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகின.

இதை வைத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது தொடர்பாக மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதுச்சேரி காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்ஸவாவிற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி
கிரண்பேடி

இதற்கிடையே கிரண்பேடியின் புகாருக்கு பதிலடி கொடுக்கும்வகையில் முதல்வர் நாராயணசாமி இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் ஒன்று கிரண்பேடி ஹெல்மெட் அணிந்து பயணிப்பதும், மற்றொன்று ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பதுமாகும். மேலும், அதற்கு கீழே `நீங்கள் பிரசங்கிப்பதற்கு முன் பயிற்சி செய்யுங்கள்' என ’ஆளுநர் கிரண்பேடி தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும்’ என மறைமுகமாகப் பதிவிட்டுள்ளார். இவர்களின் திடீர் வார்த்தைமோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு