Published:Updated:

உத்தரபிரதேசம்: ஒவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது! - யார் அவர்கள்?

ஒவைசி

நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மூலம் Z பிரிவு பாதுகாப்பு இன்று வழங்கப்பட்டது.

உத்தரபிரதேசம்: ஒவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது! - யார் அவர்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மூலம் Z பிரிவு பாதுகாப்பு இன்று வழங்கப்பட்டது.

Published:Updated:
ஒவைசி

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்துக்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி கார் மீது சஜர்சி சுங்கசாவடி அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஒவைசி காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் தொடர்பாக, சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் வெளியிட்ட தகவலில், ``நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீது ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கு இருக்கிறது. மேலும், அவர் தன்னை சட்டம் பயின்றவர் எனக் கூறியுள்ள நிலையில், அதை சரிபார்த்து வருகிறோம். சச்சினின் முகநூல் சுயவிவரத்தில், தன்னை இந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர் என்று பதிந்துள்ளார். மற்றொருவர் சஹாரன்பூரைச் சேர்ந்த விவசாயி சுபம், எந்த குற்றவியல் வழக்கும் இவர் மீது இல்லை.

காவல்துறை
காவல்துறை

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்ததில் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி மற்றும் அவர் சகோதரரும் எம்.எல்.ஏ-வுமான அக்பருதீன் ஓவைசி, இருவரும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கருத்துகளை கூறிவந்ததால் அவர்கள் மீது வருத்தமடைந்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்" என்று கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகளை காவல்துறை கைபற்றியுள்ளது. தற்போது துப்பாக்கிகளை யாரிடம் வாங்கினார்கள் என்று விசாரித்து வருகின்றனர்.

நேற்றிரவு நடந்த தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மூலம் Z பிரிவு பாதுகாப்பு இன்று வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!