Published:Updated:

``3 நாள்களில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்காவிட்டால்..?" - எச்சரிக்கும் செந்தில் பாலாஜி!

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

அமராவதி ஆற்றின் கடைமடைப் பகுதியான கரூர் மாவட்டம், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு முறையும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கும்போது, அது திருப்பூர் மாவட்டம் வரையிலான பயன்பாட்டிற்கு மட்டுமே ஆகிறது.

அமராவதி ஆறு
அமராவதி ஆறு ( நா.ராஜமுருகன் )

"அமராவதி ஆற்றின் கடைமடைப் பகுதியான கரூர் மாவட்டம் வரை தண்ணீர் வந்து சேரும் வகையில், இரண்டு நாள்களில் 2,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும். அப்படி திறக்கத் தவறினால், மாபெரும் அறப்போராட்டம் நடைபெறும்" என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.

அமராவதி ஆறு
அமராவதி ஆறு
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், 'ஜல் சக்தி அபியான்' திட்ட மத்திய அரசு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி,

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

"கரூர் மாவட்டத்தின் முக்கியப் பாசன ஆறுகளில் ஒன்றாக இருக்கிறது அமராவதி ஆறு. இந்த ஆற்றின் பாசனத்தை நம்பி, பல ஆயிரம் விவசாயிகள் இருக்கிறார்கள். ஆனால், அத்தகைய அமராவதி ஆற்றின் கடைமடைப் பகுதியான கரூர் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு முறையும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கும்போது, அது திருப்பூர் மாவட்டம் வரையிலான பயன்பாட்டிற்கு மட்டுமே ஆகிறது. இதனால், அமராவதி ஆற்றை நம்பியிருக்கும் கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். தற்போது, அணையில் நீர்மட்டம் போதிய அளவில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், 2 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் மட்டுமே, கரூர் மாவட்டத்திற்கு அமராவதி ஆற்று நீர் வந்துசேரும்.

Vikatan

ஆனால், தற்போது 1000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட் டுள்ளதால், இது திருப்பூர் மாவட்ட வரையிலான தேவைக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. கரூர் மாவட்ட நிர்வாகமும் இதில் பெரிய அளவில் அக்கறைகாட்டவில்லை. தற்போது, ஜல் சக்தி அபியான் திட்ட அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளோம்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

இன்னும் மூன்று நாள்களில் 2 ஆயிரம் கன அடி நீர் அமராவதி அணையிலிருந்து போர்க்கால அடிப்படையில் திறக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், பொதுமக்களையும் விவசாயிகளையும் திரட்டி, மாபெரும் அறப்போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார். இதே கருத்தை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் வலியுறுத்திப் பேசினார்.