Published:Updated:

இரண்டு நாள்களில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே சந்தித்துப் பேசுகிறார்களா?! - பரபரக்கும் மகாராஷ்டிரா

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இரண்டு நாளில் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இரண்டு நாள்களில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே சந்தித்துப் பேசுகிறார்களா?! - பரபரக்கும் மகாராஷ்டிரா

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இரண்டு நாளில் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்து புதிய அரசு பதவியேற்றிருக்கிறது. சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 39 பேர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாகச் சென்றதால் சிவசேனா இரண்டாக உடைந்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் எம்.எல்.ஏ-க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரி சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவும் தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இரு தரப்பினரும் இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் மனுக்கள் வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரவிருக்கின்றன.

இந்த வழக்கு விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயும், ஏக்நாத் ஷிண்டேயும் இரண்டு நாளில் சந்தித்துப் பேசவிருப்பதாக சிவசேனா தலைவர்களில் ஒருவரும், மராத்தி நடிகையுமான தீபாலி சையத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில், பாஜக தலைவர்கள் சிலர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முயன்றுவருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ``ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டிருக்கிறார். குடும்பத் தலைவர் என்ற முறையில் பரந்த மனதுடன் அவர்களை உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொண்டிருக்கிறார்” என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஆனால் இது குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்திடம் கேட்டதற்கு, ``அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சியில் நான் சிறிய தொண்டர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மராத்தி நடிகை தீபாலி கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் குறித்து முடிவு செய்வதற்காக கூடிய கூட்டத்தில் சிவசேனா சார்பாக சஞ்சய் ராவத் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த சஞ்சய் ராவத், ``துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு கொடுக்கும்” என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் ஏற்கெனவே ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி-க்கள் உத்தவ் தாக்கரேவிடம் கேட்டுக்கொண்டனர். துணை ஜனாதிபதி தேர்தலில் சிவசேனா எம்.பி-க்கள் எந்த மாதிரியான முடிவெடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!