Published:Updated:

``உத்தவ் தாக்கரே உடல்நிலை சரியாகும் வரை முதல்வர் பதவியை அவர் மகனிடம் கொடுங்கள்" - பாஜக அறிவுரை!

உத்தவ்தாக்கரே
News
உத்தவ்தாக்கரே

முதல்வர் தன் உடல்நிலை சரியாகும் வரை தன் பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கவேண்டும். குளிர்காலக்கூட்டத்தொடரில் முதல்வர் பங்கேற்காமல் இருப்பது சரியல்ல

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. சிவசேனாவின் உத்தவ்தாக்கரே முதல்வராக இருக்கிறார். உத்தவ் தாக்கரேவுக்கு சமீபத்தில் முதுகு தண்டுவடப்பகுதியில் ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆப்ரேசனுக்கு பிறகு மருத்துவமனையில் மூன்று வாரம் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் பங்கேற்று வருகிறார். ஒரு முறை மட்டுமே தலைமை செயலகத்துக்கு நேரில் வந்தார். தற்போது நடந்து வரும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர் காலக்கூட்டத்தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இது குறித்து மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், ``முதல்வர் தன் உடல்நிலை சரியாகும் வரை தன் பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கவேண்டும். குளிர்காலக்கூட்டத்தொடரில் முதல்வர் பங்கேற்காமல் இருப்பது சரியல்ல.

சந்திரகாந்த் பாட்டீல்
சந்திரகாந்த் பாட்டீல்

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாவிட்டால்,அவர் பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கவேண்டும். சிவசேனா அல்லது தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். முதல்வர் முழுமையாக சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதை ஏற்க முடியாது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் முதல்வர் பதவியை கொடுத்தால் திரும்ப கொடுக்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் மீது உத்தவ் தாக்கரேவுக்கு நம்பிக்கை இல்லை. உத்தவ் தாக்கரே தன் மகன் ஆதித்ய தாக்கரேவிடம் பதவியை கொடுக்கலாம். மகாராஷ்டிராவில் பல்வேறு துறைகளுக்கு வேலைக்கு ஆள்களை தேர்வு செய்ததில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அது குறித்து சட்டமன்றத்தில் பிரச்னையை கிளப்புவோம். இந்த விவகாரத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்துவோம்" என்றார்.

முதல்வர் உடல் நிலை குறித்து மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ``முதல்வர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். எந்த நேரமும் சட்டமன்றத்துக்கு வரலாம். எனவே பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர் வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்வார்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz