Published:Updated:

மாநகராட்சித் தேர்தல் கூட்டணி: அம்பேத்கர் பேரனை நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே?!

உத்தவ் தாக்கரே - பிரகாஷ் அம்பேத்கர்
News
உத்தவ் தாக்கரே - பிரகாஷ் அம்பேத்கர் ( ட்விட்டர் )

மும்பை மாநகராட்சித் தேர்தலில், கூட்டணி அமைப்பது தொடர்பாக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரைச் சந்தித்து, உத்தவ் தாக்கரே முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

மாநகராட்சித் தேர்தல் கூட்டணி: அம்பேத்கர் பேரனை நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே?!

மும்பை மாநகராட்சித் தேர்தலில், கூட்டணி அமைப்பது தொடர்பாக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரைச் சந்தித்து, உத்தவ் தாக்கரே முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே - பிரகாஷ் அம்பேத்கர்
News
உத்தவ் தாக்கரே - பிரகாஷ் அம்பேத்கர் ( ட்விட்டர் )

மும்பை மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தன் செல்வாக்கை நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். இதற்காக உத்தவ் தாக்கரே தனது கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கெனவே உத்தவ் தாக்கரே கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்தக் கட்சிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் தங்களின் கட்சியுடன் கூட்டணிவைக்க புதிய வலுவான ஒரு கட்சி தேவை என்று உத்தவ் தாக்கரே கருதுகிறார். இதனால் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரை, தங்களின் கூட்டணிக்கு இழுக்கும் வேலையில் உத்தவ் தாக்கரே ஈடுபட்டிருக்கிறார். பிரகாஷ் அம்பேத்கர் வஞ்சித் பகுஜன் அகாடி (Vanchit Bahujan Akadi)  என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதில் ஒவைசியின் கட்சியும் இடம்பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் இந்தக் கட்சி தனித்துப்போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றதால், காங்கிரஸ் கூட்டணி அதிகமான இடங்களில் தோல்வியைச் சந்தித்தது. தற்போது சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் வஞ்சித் பகுஜன் அகாடி சேரும் பட்சத்தில் அது மிகவும் வலுவான கூட்டணியாக மாறும். எனவே உத்தவ் தாக்கரேவின் சிவசேனா தலைவர்கள் முதற்கட்டமாக வஞ்சித் பகுஜன் அகாடியுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

இதையடுத்து உத்தவ் தாக்கரேயும், பிரகாஷ் அம்பேத்கரும் நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டனர். இருவரும் முதலில் பொதுவான ஓர் இடத்தில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டனர். கடைசி நேரத்தில் இருவரும் சந்தித்துப் பேசும் இடம் மாற்றப்பட்டது. இருவரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது. இதில் மும்பை மாநகராட்சித் தேர்தல் கூட்டணி பற்றியும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கருத்துகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இருதரப்பினரும் பேசினர். பிரகாஷ் அம்பேத்கருடன் அவரின் மகன் சுஜத் அம்பேத்கரும் கலந்துகொண்டார்.

உத்தவ் தாக்கரே -
உத்தவ் தாக்கரே -

உத்தவ் தாக்கரேயுடன் விநாயக் ராவத், மிலிந்த் நார்வேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். ராம்தாஸ் அதாவலே தலைமையிலான இந்திய குடியரசுக்கட்சி தற்போது பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது. பிரகாஷ் அம்பேத்கர் பெயரில் ஒரு இந்திய குடியரசுக் கட்சி செயல்பட்டுவந்தது. அந்தக் கட்சியை உள்ளடக்கித்தான் வஞ்சித் பகுஜன் அகாடியை பிரகாஷ் அம்பேத்கர் உருவாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. .