Published:Updated:

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனாவிலிருந்து நீக்கிய உத்தவ் தாக்கரே!

உத்தவ் தாக்கரே

சிவசேனா அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேயை உத்தவ் தாக்கரே கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனாவிலிருந்து நீக்கிய உத்தவ் தாக்கரே!

சிவசேனா அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேயை உத்தவ் தாக்கரே கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியிலிருந்து 40 எம்.எல்.ஏ-க்களைப் பிரித்து, பாஜக-வின் துணையோடு முதல்வராகியிருக்கிறார். இதனால் கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனாவிலிருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே வெளியிட்டிருக்கும் கடிதத்தில், சிவசேனா பக்‌ஷா பிரமுக் என்ற முறையில் எனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏக்நாத் ஷிண்டேயைக் கட்சியின் அமைப்பு தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதில் தெரிவித்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே, ``நான்தான் சிவசேனா தலைவர். உத்தவ் தாக்கரே அணி சிறுபான்மையாகிவிட்டது. எனவே, அவர் தன்னைக் கட்சித் தலைவர் என்று அழைக்க முடியாது. டெக்னிக்கலாக மட்டுமே இப்போது உத்தவ் தாக்கரே தலைவர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ்
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ்

அதோடு ஏக்நாத் ஷிண்டே தன்னை பால் தாக்கரேயின் அரசியல் வாரிசு என்று அறிவித்துக்கொண்டதோடு, தனது சமூக வலைதளப் பக்கத்திலும் அதை புரொஃபைல் படமாக வைத்தார். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிலும் தாங்களே உண்மையான சிவசேனா என்று ஏக்நாத் ஷிண்டே அணி குறிப்பிட்டிருக்கிறது. இதற்கிடையே சிவசேனா எம்.பி-க்களில் ஒரு பிரிவினர் ஏக்நாத் ஷிண்டேயுடன் இணைந்து செயல்படும்படி உத்தவ் தாக்கரேயிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் எம்.பி-க்கள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்கு உத்தவ் தாக்கரே இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும் சிவசேனா எம்.பி-க்கள் 12 பேர் அணி மாறத் தயாராக இருப்பதாக பாஜக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதனால் சிவசேனாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!