Published:Updated:

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் மதிய விருந்து; உறவைப் புதுப்பித்தாரா உத்தவ் தாக்கரே?!

நக்சலைட் பாதித்த பகுதியில் அதிக அளவில் பள்ளிகள் மற்றும் தபால் நிலையங்களைத் திறப்பது குறித்தும் மாநில முதல்வருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நக்சலைட்கள் உலாவும் மாநிலத்தின் முதல்வர்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டியிருந்தார். இதில் இடது சாரி தீவிரவாதம் குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநில முதல்வர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஆந்திரா உட்பட சில மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்தில் நக்சலைட் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், நக்சலைட்கள், மாவோயிஸ்ட்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

விருந்தில் உத்தவ்தாக்கரே
விருந்தில் உத்தவ்தாக்கரே
`எதிர்கால நண்பர்களே..!' - உத்தவ் தாக்கரே பேச்சால் கூட்டணியில் சர்ச்சை

நக்சலைட்களை எதிர்த்துப் போராட மாநிலங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் என்னென்ன, எவ்வளவு போலீஸார் நக்சலைட்களை எதிர்த்துப் போராட நிறுத்தப்பட்டுள்ளனர், நக்சலைட்கள் பாதித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அமித்ஷா மாநில அரசுகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நக்சலைட்கள் பாதித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் சாலை கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தவேண்டும் என்றும், தகவல் தொடர்பு வசதிகளை அதிகரிக்கவேண்டும் என்றும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அமித் ஷா கேட்டறிந்தார். நக்சலைட் பாதித்த பகுதியில் அதிக அளவில் பள்ளிகள் மற்றும் தபால் நிலையங்களைத் திறப்பது குறித்தும் மாநில முதல்வருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. தற்போது நாட்டில் 45 மாவட்டத்தில் மட்டுமே நக்சலைட்களின் ஆதிக்கம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இக்கூட்டத்தில் பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே மஹாராஷ்டிராவில் இடது சாரி தீவிரவாதத்தை எதிர்த்து போராட 1200 கோடி தேவை என்று கேட்டுக்கொண்டார். இச்சந்திப்புக்குப் பின்பு அமித் ஷா முதல்வர்களுக்கு மதிய விருந்து கொடுத்து கவுரவித்தார். இதில் பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கலந்து கொண்டு பழைய உறவை புதுப்பித்தார். இதற்கு முன்பு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே டெல்லி சென்று இருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தனிப்பட்ட முறையிலும் பிரதமரை சந்தித்து பேசினார் உத்தவ் தாக்கரே. கடந்த சில நாள்களுக்கு முன்பு பாஜக தலைவர்களை தனது வருங்கால நண்பர்கள் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு