Published:Updated:

"எனக்கு இளைஞரணியா... சிரிப்புதான் வருது!" - 'அப்போ - இப்போ' உதயநிதி #21YearTimeline

தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளாராக நியமிக்கப்பட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 1984-ல் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த பொறுப்பு... 35 வருடங்கள் கழித்து இப்போது அவரது மகனிடம் வந்திருக்கிறது. அப்போது 31 வயதில் ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆனார். இப்போது 41 வயதில் உதயநிதி அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். 20 வயதில் கல்லூரி சேர்மன் தேர்தலில் தொடங்கி இப்போது 41 வது வயதில் தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளர் ஆனது வரை... உதயநிதி ஸ்டாலினின் காலக்கோட்டை ஓட்டிப்பார்க்கலாம் வாருங்கள்.

20 வயதில் உதயநிதி
20 வயதில் உதயநிதி

இந்தப் புகைப்படம் எடுத்தபோது 20 வயது உதயநிதி லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்தார். அப்போது சேர்மன் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வந்தது. அதில் ஈடுபாடு காட்டாத உதயநிதி, தனது நண்பனை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்.

உதயநிதியின் பவுலிங் செண்டர்
உதயநிதியின் பவுலிங் செண்டர்

யூ.எஸ்ஸில் எம்.பி.ஏ முடித்து வந்ததும் சென்னையில் அதுவரை இல்லாத புதுமையான தொழிலைத் தொடங்க வேண்டும் என்பதற்காக பவுலிங் சென்டர் துவங்கினார்.

உதயநிதி - கிருத்திகா திருமணம்
உதயநிதி - கிருத்திகா திருமணம்

கல்லூரி படிக்கும்போதிருந்து காதலித்து வந்த கிருத்திகாவை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

விஜய்யுடன் உதயநிதி
விஜய்யுடன் உதயநிதி

‘தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிச்ச ஹீரோ விஜய். நான் படம் தயாரிச்சா அவரை வச்சுதான் முதல் படம் எடுப்பேன்’ என்று சொல்லி 2008-ல் குருவி படத்தைத் தயாரித்தார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி
உதயநிதி

2012-ல் நில அபகரிப்புப் புகாரில் சிக்கினார். அப்போது நீங்கள் இளைஞரணிச் அமைப்பாளர் ஆகப்போவதாக சொல்கிறார்களே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்... நிச்சயம் ஏற்க மாட்டேன்.” என்றார். (15-01-2012 ல் வெளிவந்த ஜூனியர் விகடன் பேட்டி )

இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பு
இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பு

கருணாநிதி, மு.க.ஸ்டாலினை தி.மு.க தலைவராக முன்மொழிந்தபோது ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்காக ஆனந்த விகடனுக்குப் பேட்டியளித்தார் உதயநிதி. அப்போது அவர் சொன்னது, “என்னைக்கூட அடுத்த இளைஞரணித் தலைவர்னு சொன்னாங்க அதைக் கேட்டப்போ சிரிப்புதான் வந்துச்சு. கட்சிக்காக உழைச்ச எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்குத்தான் பதவிகள் போகணும்... போகும்!” (16-1-2013 ல் வெளிவந்த ஆனந்த விகடன் பேட்டி)

கருணாநிதி மறைவின் போது உதயநிதி
கருணாநிதி மறைவின் போது உதயநிதி

கருணாநிதியின் மறைவின் போது உதயநிதி.

கிராம சபை கூட்டத்தில் உதயநிதி
கிராம சபை கூட்டத்தில் உதயநிதி

தி.மு.கவின் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். ‘இந்த கான்சப்ட் என்னைப் பார்த்து காப்பியடிக்கிறாங்க’ என்று சொன்ன கமலையும் அறியாமையில் புலம்புகிறார் என்று முந்தைய கிராம சபைக் கூட்டங்களின் புகைப்படங்களைக் காட்டி விமர்சித்தார்.

உதயநி'தீ' பிரசாரம்
உதயநி'தீ' பிரசாரம்

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அன்புமணி பேசியதை குறும்படமாக போட்டுக் காட்டியது, தமிழச்சியை அழகான வேட்பாளர் என்று வர்ணித்தது என இவரது பிரசாரம் வெகுமக்களை கவரும் வண்ணம் இருந்தது.

திமுக தலைவர் ஸ்டாலினுடன் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி
திமுக தலைவர் ஸ்டாலினுடன் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி

ஜூலை 4, 2019 அன்று தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராகத் நியமிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

காலம் உதயநிதியை என்னவாக மாற்றும் என்பதை நீங்களே கமென்டில் சொல்லுங்கள்!