Published:Updated:

உதயநிதியை முன்வைத்து நெல்லை உடன்பிறப்புகள் உள்குத்து அரசியல்... நடப்பது என்ன?

வெள்ளக்கோவில் சாமிநாதன்
வெள்ளக்கோவில் சாமிநாதன்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து நான்காவது முறையாக இருக்கிறார் டி.பி.எம்.மைதீன்கான். இந்தத் தொகுதியைக் குறிவைத்து

கையில் முரசொலியுடன் வந்தார் கழுகார். முந்திரி பக்கோடாவை தட்டில் நிரப்பிவிட்டு "வெள்ளக்கோவில் சாமிநாதன் ஏதோ அப்செட் என்கிறார்களே..?" என்றோம்.

"தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை உதயநிதிக்காக விட்டுக்கொடுத்தபோது, 'தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் அமைச்சர் பதவி நிச்சயம்' என வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு நம்பிக்கை அளிக்கப் பட்டதாம். அந்த நம்பிக்கையில், காங்கேயம் தொகுதியில் தேர்தல் வேலையைப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் ஆரம்பித்துவிட்டார்.

இந்தநிலையில், திடீரென 'சேனாபதி காங்கேயம் கால்நடைகள் ஆராய்ச்சி மைய' தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தி.மு.க-வில் ஆக்டிவ்வாக வலம்வருகிறார். சமீபத்தில், உதயநிதியைச் சந்தித்தும் பேசியிருக்கிறார். அதனால், 'சிவசேனாபதிதான் காங்கேயம் தொகுதி தி.மு.க வேட்பாளர்' என்று திருப்பூர் மாவட்டத்தில் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால்தான், சாமிநாதன் அப்செட்!"

"ம்ம்... பாளையங்கோட்டையில் உதயநிதி போட்டியிடப் போவதாக ஒரு தகவல் ஓடுகிறதே..?"

உதயநிதி
உதயநிதி

"அதுவும் உள்குத்து அரசியல்தான். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து நான்காவது முறையாக இருக்கிறார் டி.பி.எம்.மைதீன்கான். இந்தத் தொகுதியைக் குறிவைத்து, நெல்லை தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் பலமுறை முட்டிமோதியபோதும், மைதீன்கானை அசைக்க முடியவில்லை.

மைதீன்கானுக்கு மாற்றாக வேறொருவரை வேட்பாளராக நிறுத்தும் ஐடியாவும் தி.மு.க தலைமைக்கு இல்லை. இந்தநிலையில்தான், 'பாளையங்கோட்டைத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும்' என்று அப்துல் வஹாப்பின் ஆதரவாளர்கள் உள்குத்து விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தக் கோரிக்கையை உதயநிதி ஸ்டாலினிடமும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். 'எனக்குக் கிடைக்காதது, உனக்கும் கிடைக்கக் கூடாது என்கிற உக்கிர அரசியல் இது' என்கிறார்கள் நெல்லை உடன்பிறப்புகள்."

* பன்னீரின் பாய்ச்சலுக்குப் பின்னால் அவருடைய மகன் ரவீந்திரநாத் இருப்பதாகச் சொல்கிறார்கள். ரவீந்திரநாத்துக்கு பா.ஜ.க நெட்வொர்க்குகளை டெல்லியில் ஏற்படுத்திக் கொடுப்பது சசிகலா புஷ்பாவாம்.

> "ஊட்டி தி.மு.க-வில் என்ன பஞ்சாயத்து?"

> "தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அரண்டு போயிருக்கிறாராமே?!"

> "அ.தி.மு.க-வில் நிலவரம் எப்படியிருக்கிறது?"

> "அ.தி.மு.க தலைமையில் ஏற்பட்ட பஞ்சாயத்தால், கன்னியாகுமரி அ.தி.மு.க குஷியில் திளைக்கிறதாமே?"

- இவற்றையொட்டிய விரிவான தகவல்களுடன், கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட் அனைத்தையும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/33rXQRL > மிஸ்டர் கழுகு: "ஒட்டுக்கேட்கிறாங்கப்பா!" - அலறும் துரைமுருகன்... https://bit.ly/33rXQRL

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு