Published:Updated:

`` `வாரிசு’ பட ரிலீஸை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாகத் தடுக்கிறது”- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

``நடிகர் விஜய் நடித்த `வாரிசு’ பட ரிலீஸை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாகத் தடுக்கிறது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நினைத்தால்தான் திரைப்படங்களைத் திரையிட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது” என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

`` `வாரிசு’ பட ரிலீஸை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாகத் தடுக்கிறது”- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

``நடிகர் விஜய் நடித்த `வாரிசு’ பட ரிலீஸை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாகத் தடுக்கிறது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நினைத்தால்தான் திரைப்படங்களைத் திரையிட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது” என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

Published:Updated:
கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வுமான கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின்  8-வது மாநாடு புதுடெல்லியில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அவரிடம், தீப்பெட்டித் தொழிலை பாதித்துவரும்  சீன லைட்டர்களின் இறக்குமதியை நிறுத்த வேண்டும், கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறேன்.  

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

தீப்பெட்டித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  வில்லிசேரி கிராமத்தில் இந்த மாதத்துக்குள் வங்கிக் கிளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கான பணிகள் நடந்துவருகின்றன.  அதேபோல், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வைச் சந்தித்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் லிஃப்ட் அமைப்பது, பேட்டரி கார் அமைப்பது உள்ளிட்ட வசதிகள், ரயில்கள் நின்று செல்வது, லட்சுமிமில் முதல் இளையரசனேந்தல் சுரங்கப்பாதை வரை அணுகு சாலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.

அ.தி.மு.க பொதுக்குழு, ஏற்கெனவே வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது. இதில் 99 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஓ.பி.எஸ்-ஸைப் பொறுத்தவரை அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதன் பின்னர் அவர் கூறும் கருத்துகள் அ.தி.மு.க-வுக்குப்  பொருந்தாது. மாறுபட்ட கருத்துகளைக்கொண்ட கட்சிகள் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்பார்கள். ஆனால், தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் பேரத்தின் அடிப்படையில்  இணைந்தவர்கள்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்திருக்கிறது என அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இது அரசுக்கு அவமானமான நிலை. இதற்கு எதிர்க்கட்சிகள், கூட்டணி எனப் பாராமல் கண்டனக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

நடிகர் விஜய் நடித்த `வாரிசு’ பட ரிலீஸை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாகத் தடுக்கிறது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வந்தால்தான் திரைப்படங்கள் திரையிடப்படும் என்ற நிலை இருக்கிறது.

எந்தப் படமும் எடுக்க முடியவில்லை. எடுத்தாலும் வெளியிட முடியவில்லை. அதிகமான பொருட்செலவில் படமெடுத்தாலும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நினைத்தால்தான் படம் வெளியிட முடியும் என்ற நிலை உருவாகியிருக்கும் காரணத்தால், எதிர்காலத்தில் இவர்கள் மூலம்தான் படம் வெளியிடுவது என்பது மட்டுமல்ல, இவர்கள் மட்டும்தான் படமெடுக்க முடியும் என்ற நிலை தமிழகத்தில் உருவாகும். திரைத்துறை அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கொதித்துப்போயுள்ளனர். அதுமட்டுமல்ல, இதுவரை செய்தி மற்றும் விளம்பரத்துறைதான் நேரடியாக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் பணிகள், அரசின் திட்டங்கள் குறித்து செய்திகளை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது அதைத் தனியாருக்கு ஒதுக்கியிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். இது மோசமான சூழ்நிலையை உருவாக்கும்” என்றார்.