Published:Updated:

டெல்லி: கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு சரத் பவார் வைத்த விருந்தில் நிதின் கட்கரி!

விருந்தில் சஞ்சய் ராவத்

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.

டெல்லி: கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு சரத் பவார் வைத்த விருந்தில் நிதின் கட்கரி!

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.

Published:Updated:
விருந்தில் சஞ்சய் ராவத்

மக்களவைச் செயலாளர், முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு டெல்லியில் இரண்டு நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களும் டெல்லி சென்றிருந்தனர். அவர்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ-க்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது இல்லத்தில் நேற்று இரவு விருந்து கொடுத்து கௌரவித்தார். இந்த விருந்தில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தும் கலந்துகொண்டார். இது தவிர மூன்று கட்சி எம்.பி-க்களும் பங்கேற்றனர். மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இந்த விருந்தில் பங்கேற்றார். கட்கரி அனைவரிமும் சுமுகமான உறவைக் கடைப்பிடித்துவருகிறார்.

சரத் பவார்
சரத் பவார்

அந்த வகையில் நிதின் கட்கரி இந்த விருந்தில் பங்கேற்றதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சில நாள்களுக்கு முன்பு நிதின் கட்கரி மும்பையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குடும்பரீதியிலானது என்றும், இதில் அரசியல் கிடையாது என்றும் கட்கரி தெரிவித்திருந்தார்.

நேற்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சிவசேனாவின் சஞ்சய் ராவத் குடும்பச் சொத்துகளைப் பறிமுதல் செய்தனர். ஆனால் டெல்லியில் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சஞ்சய் ராவத் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ-க்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்து கௌரவித்தார். அதோடு சரத் பவாரின் விருந்திலும் பங்கேற்றார். விருந்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், விசாரணை அமைப்புகளுக்கு பயந்து கட்சி மாறிவிடக் கூடாது என்றும் சரத் பவார் தனிப்பட்ட முறையில் எம்.எல்.ஏ-க்களிடம் கேட்டுக்கொண்டார். பாஜக மீண்டும் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்க்கும் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது. எனவே எம்.எல்.ஏ-க்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சஞ்சய் ராவத்தும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism