Published:Updated:

`அரசை காப்பாற்ற முயன்றால்’ -சரத் பவார், உத்தவ் தாக்கரேயை மத்திய அமைச்சர் மிரட்டியதாக சிவசேனா புகார்

சஞ்சய் ராவத்

``சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை காப்பாற்ற முயன்றால் வீட்டுக்கு போக மாட்டீர்கள் என்று சரத் பவாரை மத்திய அமைச்சர் மிரட்டி இருக்கிறார். ” - சஞ்சய் ராவத்

`அரசை காப்பாற்ற முயன்றால்’ -சரத் பவார், உத்தவ் தாக்கரேயை மத்திய அமைச்சர் மிரட்டியதாக சிவசேனா புகார்

``சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை காப்பாற்ற முயன்றால் வீட்டுக்கு போக மாட்டீர்கள் என்று சரத் பவாரை மத்திய அமைச்சர் மிரட்டி இருக்கிறார். ” - சஞ்சய் ராவத்

Published:Updated:
சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஷ் அகாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக பிரிந்து அஸ்ஸாமில் முகாமிட்டுள்ளனர். அவர்களை மீண்டும் மும்பைக்கு கொண்டு வர சிவசேனா தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டே அணியில் ஆரம்பத்தில் 30 பேர் இருந்த நிலையில் தற்போது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் இருப்பதாகவும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 50 பேர் இருப்பதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இன்னும் எம்.எல்.ஏ.க்கள் வந்து கொண்டே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிரா ஆளுநருக்கு நேற்று ஏக்நாத் ஷிண்டே ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஏக்நாத் ஷிண்டேயிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துவிட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் உடனே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் போஸ்லே
சஞ்சய் போஸ்லே

அஸ்ஸாமில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் ஓட்டல் ஒரு வாரத்திற்கு முன்பதிவு செய்யபட்டு இருக்கிறது. இதனால் ஒரு வாரம் முடியும் முன்பாக அவர்கள் மும்பைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டி இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ``மத்திய அமைச்சர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மிரட்டி இருக்கிறார். மகா விகாஷ் அகாடி அரசை காப்பாற்ற முயன்றால் சரத் பவார் வீட்டிற்கு போக முடியாது என்று மிரட்டியிருக்கிறார். ஆட்சியை காப்பாற்ற முடிகிறது அல்லது முடியாமல் போகிறது. ஆனால் சரத் பவாருக்கு எதிராக இது போன்ற வார்த்தையை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதே பாஜக மத்திய அமைச்சர் என்னையும், முதல்வர் உத்தவ் தாக்கரேயையும் மிரட்டி இருக்கிறார். இதனை பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் அனுமதிக்கிறாரக்ளா? அ

அவையில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்கும்போது எங்களின் பலம் தெரிய வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே அஸ்ஸாமில் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு வெளியில் சிவசேனா எம்.எல்.ஏ.சஞ்சய் போஸ்லே என்பவர், ``மீண்டும் மாதோஸ்ரீக்கு(உத்தவ் தாக்கரே இல்லம்) வாருங்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு சிவசேனா எவ்வளவோ செய்திருக்கிறது. அதற்கு நாம் மாதோஸ்ரீக்கு கைமாறு செய்யவேண்டும்” என்று எழுதப்பட்ட பேனருடன் நிற்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism