Published:Updated:

`மதமாற்ற திருமணங்களைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம்!’ - உ.பி அரசு திட்டம்

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

`தங்களின் சுய அடையாளங்களை மறைத்துக்கொண்டு, அப்பாவிப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, பெண்களின் வாழ்க்கையை அழிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்' - யோகி ஆதித்யநாத்

பிறப்பால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்துக்கு மாறினார். திருமணமான மூன்று மாதங்களுக்கு பின்னர், உறவினர்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்புக்காக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை எடுத்து விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, `திருமண நோக்கத்துக்காக மட்டும் மதம் மாறுவது ஏற்கத்தக்கதல்ல’ என்று உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

திருமணம்
திருமணம்
Representational Image

இந்தநிலையில், இந்த வழக்கை மேற்கோள்காட்டிப் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ``இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துவருவது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தங்களின் சுய அடையாளங்களை மறைத்துக்கொண்டு, அப்பாவிப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, பெண்களின் வாழ்க்கையை அழிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இது போன்ற மதமாற்றங்கள் ஏற்புடையதல்ல என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது. சமூகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காகவும், லவ் ஜிஹாத்துக்கு எதிராகவும் விரைவில் தனிச் சட்டம் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

ஹத்ராஸ் சம்பவம்: `அவப்பெயர்... சகோதரியாகச் சொல்கிறேன்!' - யோகி ஆதித்யநாத்துக்கு உமா பாரதி அட்வைஸ்

`லவ் ஜிஹாத்’ என்பது இந்து மதத்தில் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் இஸ்லாமியர்களைக் குறிக்க வலதுசாரிகளால் பயன்படுத்தப்படும் சொல். திருமணம் என்பது திருமணத்துக்கான வயது வரம்பை எட்டிய ஆண், பெண் இருவரின் முடிவைச் சார்ந்தது என சமூக ஆர்வலர்களால் பல்வேறுவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

யோகி ஆதித்யநாத் முன்வைத்த கருத்துக்கு சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர சௌத்திரி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு