Published:Updated:

``அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியது!” - தேனியில் ஓ.பி.எஸ்

தேனி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டஓ.பி.எஸ், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

OPS
OPS

அரசு முறைப் பயணமாக 10 நாள்கள் அமெரிக்கா சென்ற துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அவரது சொந்த ஊரான தேனிக்கு வருகை தந்தார். முன்னதாக தேனி - திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்டுரோட்டில், தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர், பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற ஓ.பி.எஸ்., தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டார்.

OPS
OPS

விழாவில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அமெரிக்கப் பயணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ``எந்த நோக்கத்திற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றேனோ, அது முழுவதுமாக வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைவது குறித்து கேட்டதற்கு, ”இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள். இணைந்து தேர்தலைச் சந்திக்கட்டும். பிறகு கருத்து சொல்கிறேன்” என்றார்.

OPS
OPS
தேனி ரூட்டை மாற்றிய ஓ.பி.எஸ்..!- அதிர்ச்சி கொடுத்ததா உசிலம்பட்டி  போராட்டம்?

நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளாரே எனக் கேட்டதற்கு, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அ.தி.மு.க’வைப் பொறுத்தவரை வெற்றிடம் என்பதே கிடையாது.” என்றார்.

மேலும், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் சரி, சந்திக்க தயார். அதில் அ.தி.மு.க பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என்றார்.

OPS
OPS

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ”இலங்கை மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு பிரச்னை என்றாலும் அ.தி.மு.க அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஐ.ஐ.டி மாணவி தற்கொலை குறித்து கேள்வி எழுப்பிய போது, “மாணவர்கள் படிப்பதற்காகவே வந்துள்ளனர். தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.