Published:Updated:

``கர்பா நடனம்... `லவ் ஜிஹாத்’ நிகழ வழிசெய்யும் இடங்களாக மாறிவிட்டன” - மத்தியபிரதேச அமைச்சர்

உஷா தாக்கூர்

``கர்பா நடனம் நிகழும் இடங்கள், தற்போது `லவ் ஜிஹாத்ப் நிகழ வழிசெய்யும் இடங்களாக மாறிவிட்டன.” - மத்தியப் பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர்.

``கர்பா நடனம்... `லவ் ஜிஹாத்’ நிகழ வழிசெய்யும் இடங்களாக மாறிவிட்டன” - மத்தியபிரதேச அமைச்சர்

``கர்பா நடனம் நிகழும் இடங்கள், தற்போது `லவ் ஜிஹாத்ப் நிகழ வழிசெய்யும் இடங்களாக மாறிவிட்டன.” - மத்தியப் பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர்.

Published:Updated:
உஷா தாக்கூர்

இந்தியாவில் இது பண்டிகைக் காலம். அடுத்து வட இந்தியாவில் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் நவராத்திரிப் பண்டிகை வரப்போவதை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரம்பர்ய நடனமான கர்பா நடனம் நடைபெறவிருக்கிறது. ஆனால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது அதிகரித்துவரும் ‘லவ் ஜிஹாத்’ பிரச்னையைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை (8-9-22) அன்று கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், ``தற்போது லவ் ஜிஹாத் பிரச்னைகள் அதிகமாக நடந்துவருகின்றன. அதனால் இதைத் தவிர்க்கும் வகையில், கர்பா நடனத்தைப் பார்வையிட வரும் ஒவ்வொருவரும் அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். கர்பா நடனம் நிகழும் இடங்கள், தற்போது `லவ் ஜிஹாத்’ நிகழ வழிசெய்யும் இடங்களாக மாறிவிட்டன. இதனால் கர்பா நடன அமைப்பாளர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் எவருக்கும் அனுமதி இல்லை. இது எல்லாருக்கும் பொருந்தும்” என அறிவுறுத்தியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்தியப் பிரதேசத்தில் துர்கை பூஜை பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு துர்கை பூஜை பண்டிகை வருகிற செப். 26-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது. இந்தப் பண்டிகையின் 9-வது நாள் அவர்களின் பாரம்பர்ய நடனமான கர்பா நடனம் நடைபெறும்.

``கர்பா நடனம்... `லவ் ஜிஹாத்’ நிகழ வழிசெய்யும் இடங்களாக மாறிவிட்டன” - மத்தியபிரதேச அமைச்சர்

கடந்த 2014-ம் ஆண்டில், உஷா தாக்கூர் எம்.எல்.ஏ-வாக இருந்த காலககட்டத்தில், அவருடைய தொகுதிக்குட்டப்பட்ட இடங்களில் நடக்கும் கர்பா நடனத்தைப் பார்வையிட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ம் ஆண்டு, மத்தியப் பிரதேச சட்டமன்றம் திருமணம் அல்லது ஏமாற்றி மதமாற்றம் செய்வதைத் தடைசெய்யும் வகையில், குரல் பதிவு மூலம் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவின்படி, தன் சுயவிவரத்தை மறைத்து திருமணம் செய்தல், திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டுதல், பாலியல்ரீதியாக அச்சுறுத்துதல் போன்ற மோசடிகள் மூலம் திருமணம் அல்லது மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.