Published:Updated:

`கொரோனா வைரஸ் போன்றவர் செந்தில் பாலாஜி!' - வைகைசெல்வன்

அ.தி.மு.க பொதுக்கூட்டம்
அ.தி.மு.க பொதுக்கூட்டம் ( நா.ராஜமுருகன் )

`செந்தில் பாலாஜி திக்கு தெரியாத காட்டில் நின்று கதறிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.கவுக்கு அவர் செய்த துரோகம்தான் அதற்கு காரணம். அ.தி.மு.கவின் சாபம் அவரை சும்மா விடாது'.

``சென்னையில் செந்தில் பாலாஜியின் வீட்டையெல்லாம் சீல் வைத்துவிட்டார்கள். இப்போது செந்தில் பாலாஜி திக்கு தெரியாத காட்டில் நின்று கதறிக்கொண்டிருக்கிறார். அ.தி.மு.கவுக்கு அவர் செய்த துரோகத்தால்தான், இதெல்லாம் அவருக்கு நடக்கிறது. அ.தி.மு.கவின் சாபம் அவரை சும்மா விடாது" என்று அ.தி.மு.கவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் வைகைசெல்வன் பேசினார்.

அ.தி.மு.க பொதுக்கூட்டம்
அ.தி.மு.க பொதுக்கூட்டம்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் தமிழகம் முழுக்க அ.தி.மு.க கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது.

`செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு ஏன்?' -கரூரைப் பதறவைத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

அந்த வகையில், கரூர் மத்திய நகர அ.தி.மு.க கழகம் சார்பில், எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கரூர் ஜவகர்பஜார் சுபாஷ்சந்திரபோஸ் சிலை அருகில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைசெல்வன் கலந்து கொண்டார். தொடர்ந்து இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,

அ.தி.மு.க பொதுக்கூட்டம்
அ.தி.மு.க பொதுக்கூட்டம்

``கடந்து ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி, நிலம் தருகிறோம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். அதன் பிறகு, மக்கள் சிந்தித்துப் பார்த்து நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கு வாக்களித்து, அமோகமாக வெற்றி பெறச் செய்தனர். தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், மக்கள் எங்களுக்கு ஆதரவை அளித்தனர்.

இதைவைத்துப் பார்க்கையில், மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் ஆசை 2021-ல் ஈடேறுமா எனத் தற்போது பலரும் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஜெயலலிதா கூறியதைப்போல், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். 2017-ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது தொடுக்கப்பட்டது என்ன வழக்கு? உற்றார் உறவினருடன் சேர்ந்துகொண்டு, அரசு வேலைக்கு உத்தரவாதம் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து அதைத் திருப்பிக் கொடுக்காமல் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார் கொரோனா வைரஸ் என்கிற செந்தில்பாலாஜி. அதற்கு இப்பதான் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க பொதுக்கூட்டம்
அ.தி.மு.க பொதுக்கூட்டம்

சென்னையில் வீட்டையெல்லாம் சீல் வைத்துவிட்டனர். அதனால், செந்தில் பாலாஜி திக்கு தெரியாத காட்டில் நின்று கதறிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.கவுக்கு அவர் செய்த துரோகம்தான் அதற்கு காரணம். அ.தி.மு.கவின் சாபம் அவரை சும்மா விடாது. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதுதான், இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது இலங்கை தமிழர்களுக்குக் குடியுரிமையைப் பற்றித் தி.மு.க.வினர் பேசுகிறீர்கள்? இது என்ன நியாயம்?" என்றார்.

பின் செல்ல