Published:Updated:

குப்பைத் தொட்டிக்குத்தான் அரசின் தீர்மானம் போகும்.. மதுரையில் வைகோ ஆவேசம்!

வைகோ
வைகோ ( ஈ.ஜெ.நந்தகுமார் )

`இஸ்லாமிய சகோதரிகள் தெருக்களுக்கு வர மாட்டார்கள். 7 நாள்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவது மதுரை வரலாற்றிலேயே கிடையாது.'

``தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இப்போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டை ஆக்கிரமித்து விடலாம் என்று பா.ஜ.க நினைப்பது நடக்காது'' என்று செய்தியாளர்களிடம் கூறினார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

வைகோ
வைகோ
ஈ.ஜெ.நந்தகுமார்

கட்சி நிகழ்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்த வைகோ தொடர்ந்து பேசும்போது, ``பா.ஜ.க-வுக்கு எதிராக நாடு முழுவதும் மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது. மக்களின் போராட்டத்தைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது.

டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசு விரும்பாது. இதற்கு எதிராக தமிழக அரசின் சட்டம் இயற்றுவது, தீர்மானம் இயற்றுவதை மத்திய அரசு பொருட்படுத்தாது. குப்பைத் தொட்டிக்குத்தான் அரசின் தீர்மானம் போகும். அதனால் இத்திட்டத்தைக் கைவிடக் கோரி மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும்.

வைகோ
வைகோ
ஈ.ஜெ.நந்தகுமார்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையில் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் நல்லமுடிவை உடனே அறிவிக்க வேண்டும்'' என்றவர், மகபூப்பாளையத்தில் 7-வது நாளாகத் தொடர்ந்து நடந்து வரும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

``இஸ்லாமிய மக்களின் உரிமையைப் பறிப்பதற்காக மோடியும் அமித் ஷாவும் இதைச் செய்கிறார்கள். அடுத்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

வைகோ
வைகோ
ஈ.ஜெ.நந்தகுமார்

இஸ்லாமிய சகோதரிகள் தெருக்களுக்கு வர மாட்டார்கள். 7 நாள்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவது மதுரை வரலாற்றிலேயே கிடையாது. கண்ணகி போராடிய மண்ணிலிருந்து இஸ்லாமியப் பெண்கள் போராடுகிறார்கள். இச்சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்'' என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு