Published:Updated:

``துரோகம் என்பது வைகோவுக்கு சொந்தமான சொத்து!" - மாணிக்கம் தாகூர் எம்.பி

``பா.ஜ.கவின் தூண்டுதலால் தான் காங்கிரசை விமர்சிக்கிறார். அமித்ஷா, மோடியிடம் நல்ல பெயர் வாங்கவே அப்படி பேசுகிறார்"

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர் ( ஆர்.எம்.முத்துராஜ் )

மோடியிடம் நல்ல பெயர் வாங்கவே காங்கிரஸ் கட்சியை வைகோ விமர்சனம் செய்வதாகவும், பொய் சொல்லியே அவர் பிழைப்பு நடத்தி வருவதாகவும் விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
ஆர்.எம்.முத்துராஜ்

இதுகுறித்து அவர் கூறும்போது, ``மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவர்தான் வைகோ. விருதுநகர் மக்களாலேயே இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளார். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அத்வானி, மோடி, வெங்கய்யா நாயுடு போன்ற பா.ஜ.க தலைவர்களை தான் சந்தித்தார். காஷ்மீர் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்யவில்லை. அந்த மக்களை இதுவரை காப்பாற்றியது காங்கிரஸ் தான். துரோகம் என்பது வைகோவுக்கு சொந்தமான சொத்து.

பா.ஜ.கவின் தூண்டுதலால் தான் காங்கிரசை விமர்சிக்கிறார். அமித்ஷா, மோடியிடம் நல்ல பெயர் வாங்கவே அப்படி பேசுகிறார். அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். 10 நிமிடத்தில் 8 நிமிடம் காங்கிரசை தான் அவர் விமர்சிக்கிறார். அவர் செய்யும் தவறுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நேற்று தி.மு.க வை விமர்சித்தார். இன்று காங்கிரசை விமர்சிக்கிறார். பொய்களை சொல்லியே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் அவர்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
ஆர்.எம்.முத்துராஜ்
``மோடியே கைதட்டினாராம்,  ரசித்தாராம்!” - வைகோ மீது பாய்ந்த கே.எஸ்.அழகிரி

தமிழக ஆட்சியாளர்கள் உண்மையிலேயே முதுகெலும்பு உள்ளவர்கள் என்றால் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டம் வராமல் தடுக்க ராஜ்யசபாவில் பேசட்டும். மக்களவையில் ஒரு நிலைப்பாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளனர். அ.தி.மு.க ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகவும், கமிசன் ஆட்சியாகவும் இருப்பதால் தான் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.