Published:Updated:

ஒரத்தநாடு பேரூராட்சியியை கைப்பற்றிய அமமுக; வருத்தத்தில் அதிமுக! - அப்செட்டில் வைத்திலிங்கம்

வைத்திலிங்கம் ( ம.அரவிந்த் )

இரண்டு பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை என்பது அதிமுக-வினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தத் தோல்வியால் தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் வைத்திலிங்கம் அப்செட்டில் இருக்கிறார்.

ஒரத்தநாடு பேரூராட்சியியை கைப்பற்றிய அமமுக; வருத்தத்தில் அதிமுக! - அப்செட்டில் வைத்திலிங்கம்

இரண்டு பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை என்பது அதிமுக-வினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தத் தோல்வியால் தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் வைத்திலிங்கம் அப்செட்டில் இருக்கிறார்.

Published:Updated:
வைத்திலிங்கம் ( ம.அரவிந்த் )

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதியான ஒரத்தநாடு பேரூராட்சியை, அமமுக கைப்பற்றியிருக்கிறது. அத்துடன் திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவிடைமருதூர் பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை. இதனால் வைத்திலிங்கம் கடும் அப்செட்டில் இருப்பதாக அதிமுக-வினர் தரப்பில் பேசப்பட்டுவருகிறது.

அமமுக-வில் வெற்றி பெற்ற சேகர்
அமமுக-வில் வெற்றி பெற்ற சேகர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வல்லம் உள்ளிட்ட 20 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் திமுக 18 பேரூராட்சிகளையும், ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக-வும் கைப்பற்றியுள்ளன. ஆடுதுறை பேரூராட்சியில் மட்டும் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நிலை நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இரண்டு மாநகராட்சிகளையும் திமுக பெரும்பான்மையாகக் கைப்பற்றியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதி ஒரத்தநாடு. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருந்துவருகிறார். ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் அமமுக வேட்பாளர்கள் 9 வார்டுகளிலும், திமுக, அதிமுக வேட்பாளர்கள் தலா மூன்று வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பதவியை அமமுக பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரத்தநாடு
ஒரத்தநாடு

அமமுக தெற்கு மாவட்டச் செயலாளரான மா.சேகர், வைத்திலிங்கத்தை எதிர்த்து அரசியல் செய்துவருபவர். ஒரத்தநாட்டில் செல்வாக்குமிக்கவராகவும் வலம்வருபவர். சேகர் 8-வது வார்டிலும், அவரின் மனைவி திருமங்கை சேகர் 11-வது வார்டிலும் போட்டியிட்ட நிலையில் இருவருமே வெற்றிபெற்றனர். மொத்தம் 9 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பதவியை அமமுக கைப்பற்றியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாக்கு எண்ணும் மையமான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி முன்பு அமமுக-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோல் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததுடன் தாரி தப்பட்டை முழங்க புதூர் வரை ஊர்வலமாகச் சென்றனர். தனது சொந்தத் தொகுதி என்பதாலும், தன் செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ளவும் வைத்திலிங்கம் ஒரத்தநாடு பேரூராட்சியில் வெற்றிபெற்று, பேரூராட்சித் தலைவர் பதவியைப் பிடித்து கைப்பற்றிவிட வேண்டும்; அதற்காக எல்லோரும் டுமையாக உழைக்க வேண்டும் எனத் தன் ஆதரவாளர்களிடமும், அதிமுக நிர்வாகிகளிடமும் கூறியிருந்தார்.

மா.சேகர்
மா.சேகர்

அவர்களும் பேரூராட்சியைக் கைப்பற்றுவதற்காகத் தீவிரமாக வேலை செய்தனர். டி.டி.வி.தினகரன் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வராததால் அதிமுக-வினர் குஷியாகினர். ஆனால் மா.சேகர் தலைமையில் அமமுக-வினர் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பை தொடக்கம் முதலே காட்டினர்.

இந்நிலையில் அமமுக-வைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒன்பது வார்டுகளில் வெற்றி பெற்று ஒரத்தநாடு பேரூராட்சியைக் கைப்பற்றி அதிமுக மற்றும் திமுக-வுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். வைத்திலிங்கம் கட்சிப் பணிகளை ஆர்வமாக மேற்கொள்ளவில்லை. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஈடுபாடும் அவரிடம் இல்லை. மேலும் ஒரத்தநாடு நகர்ப் பகுதிகளில் அவர்மீது அதிருப்தி நிலவுகிறது. இவையே அமமுக வெற்றி பெறுவதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

ஒரத்தநாடு
ஒரத்தநாடு

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக 11 வார்டுகள், அமமுக இரண்டு வார்டுகள், சுயேச்சை இரண்டு வார்டுகளைக் கைப்பற்றியிருக்கின்றன. மேலும் திருவிடைமருதூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் ஒன்பது இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் ஆறு வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். இந்த இரண்டு பேரூராட்சியிலும் அதிமுக வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை என்பது அதிமுக-வினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் வைத்திலிங்கம் இந்தத் தோல்வியால் கடும் அப்செட்டில் இருப்பதாகவும் அதிமுக தரப்பில் பேசப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism