Published:Updated:

``சசிகலாவுடனான சந்திப்பு தற்செயலாக நடந்தது!" - விளக்கமளித்த வைத்திலிங்கம்

சசிகலா- வைத்திலிங்கம்

``ஒரத்தநாடு அருகே நானும், சசிகலாவும் சந்தித்து கொண்டது தற்செயலாக நடந்த விஷயமாகும். அரசியல் ரீதியாக சந்திக்கும்போது உங்களிடம் தெரிவித்துவிட்டு சந்திக்கிறேன்." - வைத்திலிங்கம்

``சசிகலாவுடனான சந்திப்பு தற்செயலாக நடந்தது!" - விளக்கமளித்த வைத்திலிங்கம்

``ஒரத்தநாடு அருகே நானும், சசிகலாவும் சந்தித்து கொண்டது தற்செயலாக நடந்த விஷயமாகும். அரசியல் ரீதியாக சந்திக்கும்போது உங்களிடம் தெரிவித்துவிட்டு சந்திக்கிறேன்." - வைத்திலிங்கம்

Published:Updated:
சசிகலா- வைத்திலிங்கம்

``சசிகலா, டி.டி.வி.தினகரன் இருவரையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும்" என தஞ்சாவூரில் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே சசிகலாவும், வைத்திலிங்கமும் சந்தித்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. வைத்திலிங்கத்துக்கு சாக்லேட் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் சசிகலா. இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அவர், ``ஒரத்தநாடு அருகே நானும், சசிகலாவும் சந்தித்து கொண்டது தற்செயலாக நடந்த விஷயமாகும். அரசியல் ரீதியாக சந்திக்கும்போது உங்களிடம் தெரிவித்துவிட்டு சந்திக்கிறேன். அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம். அதுதான் எனது எண்ணமும்கூட, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் இருவரும் அடங்குவர்.

சசிகலா- வைத்திலிங்கம்
சசிகலா- வைத்திலிங்கம்

சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார், எப்படி அரசியலுக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் கட்சியை அபகரிக்க துடித்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் ஆணவப்போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள அ.தி.மு.க-வை அழிக்க முயற்சிக்கிறார். அ.தி.மு.க அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்கள் காணாமல் போய்விட்டன என முதலில் அவர்கள் கூறட்டும். அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு மீண்டும் அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வரவேண்டும். இதுதான் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணம். அந்த எண்ணத்தைத்தான் நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.