Published:Updated:

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்திய வைத்திலிங்கம் படை! - அதிர்ச்சியில் தஞ்சை ஆதரவாளர்கள்

எடப்பாடி பழனிசாமி - வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது வைத்திலிங்கம் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்திய வைத்திலிங்கம் படை! - அதிர்ச்சியில் தஞ்சை ஆதரவாளர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது வைத்திலிங்கம் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - வைத்திலிங்கம்

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் செயல்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது வைத்திலிங்கம் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, சரவணன், ராஜமாணிக்கம்
எடப்பாடி பழனிசாமி, சரவணன், ராஜமாணிக்கம்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக ஒற்றைத் தலைமை தொடர்பாக இருதரப்புக்கும் நடைபெற்று வரும் மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் ஆரம்பத்திலிருந்தே ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் செயல்பட்டு வருவதுடன்... தங்கள் பக்கம் 30 மாவட்டச் செயலாளர்கள் இருப்பதாகவும் கூறி வருகிறார். இந்த நிலையில், தன் சொந்த மாவட்டமான தஞ்சாவூரைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்
எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

முன்னாள் உணவுத்துறை அமைச்சரான ஆர்.காமராஜ் முன்னின்று மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளை எடப்பாடியிடம் அழைத்துச் சென்றிருப்பதும் வைத்திலிங்கம் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இது குறித்து அ.தி.மு.க வட்டத்தில் பேசினோம். ``ஒற்றைத் தலைமை விவகாரத்தில் வைத்திலிங்கம் ஓ.பி.ஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். வைத்திலிங்கம் சமீபகாலமாக சசிகலாவுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட்டு வருவதாக கட்சியில் பேசப்பட்டு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை அவர் எந்த இடத்திலும் மறுக்கவில்லை. அதே நேரத்தில் தன்னைவிட ஆளுமையாக யாரும்... குறிப்பாக தன் சொந்த மற்றும் தன் கட்டுப்பாட்டிலிருக்கக் கூடிய மாவட்டங்களில் வளர்ந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனை எதிர்த்து ஆளும்கட்சிக்கு எதிராக சிறிய கண்டனத்தைகூட அவர் தெரிவிக்கவில்லை.

ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்
ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்

போட்டியிட்டவர்களின் வெற்றிக்காக உண்மையாக மெனக்கெடவும் இல்லை. வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்துவருகிறார். அந்தப் பணிகள் எதுவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க அமைச்சர்கள் சிலரிடம் மறைமுக நெருக்கம் காட்டி வந்தார். கட்சியில் வளர வேண்டும் என்பதில் அவருக்கு எந்த அக்கறையான செயல்பாடும் இல்லை.

இதனால் ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த பலரும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி எந்த பதவியிலும் இல்லாதபோதும் கட்சியில் அதிகாரம் செலுத்தியதுடன், தனக்கு ஒத்துவராதவர்களை வைத்திலிங்கத்திடம் போட்டுக்கொடுத்து கட்டம் கட்டிவந்ததும் பலருக்கு எரிச்சலை தந்தது. கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை வைத்திலிங்கம் விரும்பியதே இல்லை, தனக்கு அடிமையாக இருந்து விசுவாசத்தை காட்டியவர்களையே விரும்பினார்... வளர்த்தும் விட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி, வேலுமணியிடம் நெருக்கமாக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சமயத்தில் வைத்திலிங்கத்துக்கு வலதுகரமாக இருந்ததாகச் சொல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி பகுதி கழகச் செயலாளரான சரவணனை கட்டம் கட்டியதுடன் அந்த பதவியை விட்டே தூக்கினார். இதே போல் வைத்திலிங்கத்தின் பினாமி எனச் சொல்லப்பட்டு வந்த காந்தியும் சில மாதங்களாகவே கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி, மத்திய மண்ட தகவல் தொழில்நுட்ப செயலாளரான வினுபாலன் உள்ளிட்ட சிலரின் தவறான கருத்துகளை கேட்டு சீனியர்கள் பலரை ஓரம் கட்டினார். இது போன்ற பல காரணங்களால் தஞ்சாவூர் மாவட்டத்தில் வைத்திலிங்கத்துக்கு எதிராகப் பெரும் படையே உருவானது. இந்த நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தந்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த வைத்திலிங்கம் ஆதர்வாளர்கள்
எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த வைத்திலிங்கம் ஆதர்வாளர்கள்

அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மா பேரவை மாநில இணை செயலாளரான காந்தி, முன்னாள் பகுதி கழக செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ மறைந்த கு.தங்கமுத்துவின் மகன் டாக்டர் கண்ணன், தம்பி ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சேகர், ராமநாதன், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளரான இளங்கோ உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, `நீங்கதான் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக வர வேண்டும்!' எனக் கூறியிருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி அவர்களிடம், `நீங்க நினைக்கிறது நடக்கும். கட்சிக்கும், நமக்கும் நல்ல காலம் பிறக்கும். எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எல்லாரும் செயல்பட்டு அம்மா ஜெயலலிதாவின் லட்சியக் கனவை நிறைவேற்றுவோம்!' என உற்சாகப்படுத்தியிருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னின்று வைத்திலிங்கம் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. டெல்டாவில் ஆளுமைமிக்க நபராக இருக்க வேண்டும் என்பதற்காக ஆர்.காமராஜ் வைத்திலிங்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்" என்றார்கள்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

வைத்திலிங்கம் தரப்பை சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர் வைத்திலிங்கம். ஓ.பி.எஸ் பக்கம் அவர் உறுதியாக நிற்பதற்கும் நியாமான காரணம் இருக்கும். அவரால் ஆதாயமடைந்த பலர் இன்று அவரை விட்டுவிட்டு எதிர் அணிக்குச் சென்றிருக்கிறார்கள். யாரெல்லாம் எடப்பாடி பக்கம் செல்வார்கள் என்பதை வைத்திலிங்கம் முன்பே அறிந்து வைத்திருந்தார். இது அவருக்கு ஒன்றும் பெரிய அதிர்ச்சியை தரவில்லை" என்கிறார்கள் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism