Published:Updated:

``எடப்பாடி பக்கம் சென்றவர்கள் இப்போது ஓ.பி.எஸ் பக்கம்” - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

``வருகிற 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறாது. நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ்-ன் செல்வாக்கு தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.” - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.

``எடப்பாடி பக்கம் சென்றவர்கள் இப்போது ஓ.பி.எஸ் பக்கம்” - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

``வருகிற 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறாது. நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ்-ன் செல்வாக்கு தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.” - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.

Published:Updated:
வைத்திலிங்கம்

தஞ்சாவூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ-வான, அமமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநகர துணைச் செயலாளரான ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். வைத்திலிங்கம், ரெங்கசாமி இருவரும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து ஆரத்தழுவிக்கொண்டனர்.

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக டி.டி.வி.தினகரன் செயல்படுவதாகப் பேசப்பட்டுவருகிறது. பொதுக்குழுப் பிரச்னைக்குப் பிறகு தஞ்சாவூர் அமமுக-வினர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். வைத்திலிங்கம் தஞ்சாவூர் வந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் அமமுக-வினரும் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

வைத்திலிங்கம்,
ரெங்கசாமி
வைத்திலிங்கம், ரெங்கசாமி

இந்த நிலையில் வைத்திலிங்கம், ரெங்கசாமி சந்தித்துக்கொண்டது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் சிரித்தபடி வணக்கம் வைத்துக்கொண்டே உற்சாகமாகக் காணப்பட்டார் வைத்திலிங்கம். திருமணத்தை நடத்திவைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர், ``பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வதற்கு முன்பே காலை 6 மணிக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத சுமார் 600 பேர் மேடைக்கு முன்பாக அமரவைக்கப்பட்டனர். அவர்கள்தான் கூச்சல் போட்டனர்.

உறுப்பினர்கள் யாரும் எந்த வார்த்தையும் பேசவில்லை. அவர்கள் அழைத்து வந்திருந்தவர்களே அந்த நிகழ்வு நடப்பதற்குக் காரணம். அவர்கள் ஒரு கட்சியின் ஜனநாயகத்துக்குப் புறம்பாக கண்ணியம், கட்டுப்பாடு, கடமை எதுவும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்தினார்கள். நீதிமன்ற அறிவுரை எதையும் கேட்காமல் தீர்மானம் கொண்டுவந்தனர்.

திருமண விழாவில் வைத்திலிங்கம்
திருமண விழாவில் வைத்திலிங்கம்

அதை எதிர்ப்பதாகக் கூறி நாங்கள் வெளிநடப்பு செய்தோம். எடப்பாடி பக்கம் சென்ற பொதுக்குழு உறுப்பினர்கள், தற்போது எங்கள் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். வருகிற 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறாது. நடந்து முடிந்த பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ்-ன் செல்வாக்கு தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது” என்றார்.