Published:Updated:

தேர்தல்: தாயுடன் களமிறங்கும் நகர நிர்வாகி! - இடியாப்பச் சிக்கலில் வாணியம்பாடி திமுக?

சாரதிகுமார்

``ஜமாஅத் ஆதரவு இருந்தால் மட்டுமே, வாணியம்பாடி நகரமன்றத் தலைவர் பதவியில் அமர முடியும். கடந்தகாலங்களைப் போன்றே, தங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

தேர்தல்: தாயுடன் களமிறங்கும் நகர நிர்வாகி! - இடியாப்பச் சிக்கலில் வாணியம்பாடி திமுக?

``ஜமாஅத் ஆதரவு இருந்தால் மட்டுமே, வாணியம்பாடி நகரமன்றத் தலைவர் பதவியில் அமர முடியும். கடந்தகாலங்களைப் போன்றே, தங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

Published:Updated:
சாரதிகுமார்

திருப்பத்தூர் மாவட்டத்தில், பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வாணியம்பாடி நகரமன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காகத் தன் தாயுடன் களமிறங்குகிறார் தி.மு.க நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார். `நகரமன்றத் தலைவர் பதவியில் தன் தாய் உமாவைத் தவிர வேறு யாரையும் உட்கார விட மாட்டேன்’ என்று சபதம் எடுத்து, சொந்தக் கட்சி நிர்வாகிகளையே பந்தாடிவருவதாக அவர்மீது அதிருப்தி நிலவுகிறது. தி.மு.க மாவட்ட பிரதிநிதியான வழக்கறிஞர் ஏ.சி.தேவகுமார் தனது மனைவி கமலேஷ்வரியை நிறுத்துவார் என்று நினைத்து, துரைமுருகன் மூலமாக காய்நகர்த்தி தேவகுமாரை கட்சியிலிருந்தே தற்காலிகமாக நீக்கச் செய்திருக்கிறார் சாரதிகுமார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நேர்க்காணலில் சாரதிகுமார்...
நேர்க்காணலில் சாரதிகுமார்...

அதேபோல, மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், நகர அவைத்தலைவருமான சையது ஹபீபும் தன் மனைவிக்கு சீட் கேட்பதால், சாரதிகுமார் அவரையும் ஓரமங்கட்டப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். மொத்தமுள்ள 36 வார்டுகளில், 21 வார்டுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். ``ஜமாஅத் ஆதரவு இருந்தால் மட்டுமே, வாணியம்பாடி நகரமன்றத் தலைவர் பதவியில் அமர முடியும். கடந்தகாலங்களைப்போன்றே, தங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்று இஸ்லாமியர்கள் குரல் கொடுப்பதால், நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார் விழிப்பிதுங்கி நிற்கிறாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வாணியம்பாடி தி.மு.க புள்ளிகள் சிலர், ``முதலாவது வார்டான பெரியபேட்டையில் தாயும், பொதுப்பிரிவுக்குள் வரும் பத்தாவது வார்டான அம்பூர்பேட்டையில் சாரதிகுமாரும் களமிறங்குகிறார்கள். எஸ்.ஆர்.கே தெரு, பஜனைக் கோயில் தெரு, திருவள்ளுவர் வீதி, சீதாராம செட்டித்தெரு, சௌத்ரி பொன்னப்ப செட்டித்தெரு, கன்னடியர் மட வீதியை உள்ளடக்கிய 10-வது வார்டில் செட்டியார், முதலியார் சமூக மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக விஸ்வகர்மா, ஜெயின் சமூகத்தினர் இருக்கிறார்கள். சாரதிகுமார் முதலியார் என்றாலும், அவருக்கு இந்த வார்டில் ஓட்டு கிடையாது.

சாரதிகுமார்
சாரதிகுமார்

ஏற்கெனவே, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வசம் இருக்கிறது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த செந்தில்குமார்தான் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இங்கு, அ.தி.மு.க-வும் வலுவாக இருப்பதால், மெஜாரிட்டி வார்டுகளைக் கைப்பற்றுவது என்பது எளிதான காரியம் கிடையாது. சாரதிகுமார் போட்டியிடும் வார்டில் அ.தி.மு.க சார்பில்அந்தக் கட்சியின் நகரப் பொருளாளர் தன்ராஜ் என்பவரின் மனைவி களமிறங்குகிறார். சொந்த வார்டு என்பது தன்ராஜ் மனைவிக்கு ப்ளஸ்ஸாக அமைகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொரு பக்கம், ஜமாஅத்தின் ஆதரவும் சாரதிகுமாருக்கு கிடைக்கவில்லை. நகரமன்றத் தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தலா... மறைமுகத் தேர்தலா என்று காத்திருந்தனர் இஸ்லாமிய சமூக பிரதிநிதிகள். நேரடித் தேர்தல் என்றால் முன்கூட்டியே ஜமாஅத் கூடி நகரமன்றத் தலைவரை ஒருமனதாக தேர்வுசெய்திருக்கும். தற்போது, மறைமுகத் தேர்தல் என்பதால், கவுன்சிலர்கள் வெற்றிக்குப் பின்னர் தலைவரை முடிவுசெய்துகொள்ளலாம் என அமைதியாக இருக்கிறார்கள்.

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

அதேசமயம், தொகுதி எம்.எல்.ஏ இந்து என்பதால், நகரமன்றத் தலைவர் பதவியிலாவது தங்கள் சமூகத்தினர் இருக்க வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் விருப்பப்படுகிறார்கள். இஸ்லாமிய சமூகப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுவதற்காக எம்.பி கதிர் ஆனந்த் மூலம் முயல்கிறார் சாரதிகுமார். இது தொடர்பாக இன்று (29-ம் தேதி), நியூடவுன் பகுதியிலிருக்கும் மண்டபத்தில், இஸ்லாமிய சமூகப் பிரமுகர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தினார் கதிர் ஆனந்த்.

இந்தத் தேர்தல்தான், நகரப் பொறுப்பாளர் சாரதிகுமாரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறது. இடியாப்பச் சிக்கலுக்கு நடுவில் அவர் தடைகளைத் தகர்த்து வெல்லப் போகிறாரா... சறுக்கி சங்கடப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism