Published:Updated:

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...” - ரகிட ரகிட ராஜேந்திர பாலாஜி...

ராஜேந்திர பாலாஜி...
பிரீமியம் ஸ்டோரி
ராஜேந்திர பாலாஜி...

மோடியை டாடி என்று சொன்னதில் என்ன தவறு? சோனியா காந்தியை `அன்னை சோனியா’ என்றுதானே அழைக்கிறார்கள்

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...” - ரகிட ரகிட ராஜேந்திர பாலாஜி...

மோடியை டாடி என்று சொன்னதில் என்ன தவறு? சோனியா காந்தியை `அன்னை சோனியா’ என்றுதானே அழைக்கிறார்கள்

Published:Updated:
ராஜேந்திர பாலாஜி...
பிரீமியம் ஸ்டோரி
ராஜேந்திர பாலாஜி...

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களில் ஸ்டாலினை அதிகம் சீண்டியதும், மோடியை அதிகம் புகழ்ந்ததும் ராஜேந்திர பாலாஜிதான். மோசடிப் புகார் வழக்கில் 19 நாள்கள் தலைமறைவாகச் சுற்றியவர், கடைசியில் கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்டார். இவர் கைதுசெய்யப்பட்டபோது, ``கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க’’ என்ற மீம் டெம்ப்ளேட் வைரலானது. அவர் அப்படி என்னவெல்லாம் பேசினார் என்பதை இங்கே ரீவைண்ட் செய்து பார்க்கலாம்!

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...” - ரகிட ரகிட ராஜேந்திர பாலாஜி...
“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...” - ரகிட ரகிட ராஜேந்திர பாலாஜி...

*‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பே இரட்டை இலைச் சின்னத்தைத்தான் காட்டுகிறார்!’’

*‘‘தி.மு.க மட்டும்தான் ரெளடிக் கட்சியா, நாங்களும் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் வந்துருக்கோம். எடப்பாடி கண் அசைச்சாபோதும், ஸ்டாலினை அரசியல் களத்திலிருந்தே வெளியேத்திடுவோம்!’’

*``ரஜினிக்கு ஈக்குவல்னா அது அஜித் ஒரு ஆள்தான்... ரஜினி மல... அஜித் தல!’’

*‘‘குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் மு.க.ஸ்டாலின்!’’

*‘‘நடிகர்களில் எம்.ஜி.ஆர் ஒருவருக்குத்தான் மவுசு; மற்றவர்கள் எல்லாம் சிறுசு!’’

*“அம்மா இல்லாத நிலத்துல, மோடிதான் எங்களுக்கு டாடி!”

*``திரையுலகின் அதிசய நாயகன் அஜித் அரசியலுக்கு வரக் கூடாதா?’’

*“மோடியை டாடி என்று சொன்னதில் என்ன தவறு? சோனியா காந்தியை `அன்னை சோனியா’ என்றுதானே அழைக்கிறார்கள்!”

*“நாம யாருக்கும் பயப்படத் தேவையில்லை... ஒபாமா வந்தாலும் சரி... ‘ட்ரம்மே’ (சாரி பிரதர், நிஜமாகவே அவர் அப்படித்தான் உச்சரித்தார்.) வந்தாலும் சரி... மோடி இருக்காரு நமக்கு. எல்லாத்தையும் மேலே இருக்குறவன் பார்த்துக்குவான்!’’

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...” - ரகிட ரகிட ராஜேந்திர பாலாஜி...
“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...” - ரகிட ரகிட ராஜேந்திர பாலாஜி...

*``திருவாரூர்ல இருந்து சென்னைக்கு டிரெயின்ல வர அஞ்சு ரூபாய். அந்த அஞ்சு ரூபாகூட இல்லாம சென்னைக்கு வந்த கலைஞர் குடும்பம், இன்னைக்கு லட்சம் கோடிக்கு அதிபதி!’’

*``இந்தியாவின் கதாநாயகனான மோடி ஒரு ஸ்டன்ட் மாஸ்டர். இந்தியாவுக்கு ஒரு பிரச்னை என்று சொன்னால், அதை மல்லுக்கட்டித் தடுக்கக்கூடிய மல்யுத்த வீரர் நரேந்திர மோடி!’’

*‘‘எடப்பாடி பழனிசாமி அரசின் ஸ்லீப்பர் செல்களாக 40 எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க-வில் இருக்கிறார்கள் தெரியுமா?’’

*``காமராஜரைத் தோற்கடிக்க வீதி வீதியா பிரசாரம் பண்ணினது கலைஞர். அதை விருதுநகர் மக்கள் மறக்கலை. எங்க ஊர்ல வந்து பேசு நீ... மெட்ராஸ்ல கம்ப்யூட்டர் ரூம்ல உட்கார்ந்து பேசாத... அண்ணா வளர்த்த கட்சி

*தி.மு.க. தெருத் தெருவா இறங்கிப் போராடிய கட்சியை, இன்னைக்கு கம்ப்யூட்டர் ரூம்ல வெச்சுட்டாரு ஸ்டாலின்!’’

*``கொடுக்க நினைச்சது அண்ணா தி.மு.க; அதைக் கெடுக்க நினைச்சது... எடுக்க நினைச்சது தி.மு.க.’’

*``என்ன மிரட்டுறியா... எல்லாரும் ஜெயிலுக்கு போயிருவீங்கனு. நீ என்ன சர்வாதிகாரியா... சதாம் உசேனா? சதாம் உசேன் கதி என்னாச்சு தெரியுமா உனக்கு? நீ (ஸ்டாலின்) என்னைக்கு முதலமைச்சர் ஆகுறது... நீ என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா?’’

*``சொல்றியே ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு கேஸுக்கு ஒரு வருஷம்னாலும், ஆயுள் முழுக்க ஜெயில்ல இருக்கணும்னு. நீ (ஸ்டாலின்) செஞ்ச தப்புக்கு ஆறு தலைமுறைக்கு ஜெயில்ல இருக்கணும்!’’

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...” - ரகிட ரகிட ராஜேந்திர பாலாஜி...
“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...” - ரகிட ரகிட ராஜேந்திர பாலாஜி...

*‘‘கெட்டுப்போனால்தான் பால், இல்லையென்றால் அது ரசாயனம்.’’

*``சினிமாவில் வேண்டுமானால் முதல்வராக கமல் நடிக்கலாம். முதலில் அவர் கவுன்சிலர் ஆகட்டும், பிறகு பார்க்கலாம்!’’

*‘‘வைகைச்செல்வன் சீக்குவந்த பிராய்லர் கோழி. அழுகிப்போன தக்காளி!’’

*``நாட்டு மக்களுக்காக சிந்திச்சுக்கிட்டு இருக்காரு எடப்பாடியார். ஆனா, பீகார்காரன் பிஷோர் கிஷோருக்கு (பிரசாந்த் கிஷோருக்கு) மக்கள் பணத்துல 350 கோடியை கொடுத்துருக்க... மேக்கப் பண்ணிக்கிட்டு ரோட்டுக்கு வர்ற நீ... குற்றால அருவிக்கு நீயும் நானும் குளிக்கப் போவோம். வெளிய வரும்போது நான் ராஜேந்திர பாலாஜியா வருவேன்... நீ யாரோ மாதிரி வருவ!’’

*‘‘ரஜினி ஒரு வெகுளி. அவர் அரசியலுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism