Published:Updated:

`பந்தியில உட்கார்ந்து சாப்பிட்டது குத்தமாய்யா?!' -கட்சிக் கூட்டத்தில் கவலைப்பட்ட வசந்தகுமார் எம்.பி

வசந்தகுமார்
வசந்தகுமார்

அதுல ஒருவர், வசந்தகுமார் இருக்கிறதுனாலதான் ரோடு போடவில்லை என்று என் காதுபடவே பேசுகிறார். நாம எதிர்க்கட்சியில இருந்து கத்துறோம், பாராளுமன்றத்தில் பேசுறோம். ஆனா, நீங்க இப்படிப் பேசுறது ரொம்ப சங்கடமா இருக்கு.

நாகர்கோவிலில், காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார், கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார். அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர், அவரது இல்லத் திருமணத்துக்கு என்னை அழைத்திருந்தார். திருமணத்துக்கு சிறிது நேரம் தாமதமாகச் சென்றேன். அப்போது சாப்பாட்டுப் பந்தி நடந்துகொண்டிருந்தது.

திருமணத்துக்கு அழைத்த நிர்வாகி, 'நீங்க கண்டிப்பா சாப்பிட்டுவிட்டுதான் போகணும். அப்பத்தான் குடும்பக்காரங்க மத்தியில எங்களுக்கு பெருமையா இருக்கும்'ன்னு சொன்னார். நானும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். அப்போது, காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், 'இங்க பாரு... ஒரு காங்கிரஸ் எம்.பி திண்ணுகிட்டு இருக்கான். இவன் எல்லாம் ஒரு மனுஷனா' என என் காதுபடப் பேசினார்.

வசந்தகுமார் பேசிய கூட்டம்
வசந்தகுமார் பேசிய கூட்டம்

நான் சாப்பிட்டது தப்பா... இல்ல அந்த நிர்வாகி என்னைத் திருமணத்துக்கு அழைச்சது தப்பா, இல்ல வசந்தகுமார் சாப்பிட வசதி இல்லாதவனா? தொண்டர்கள் வீட்டுல சாவுன்னா போறேன், சடங்குன்னா போறேன். லேட்டா போனாலும் சுக்குக் காபி குடிச்சிட்டுப் போறேன். அதை வெளியபோய் `வசந்தகுமார் வசதி இல்லாதவன், என் வீட்டுல சுக்குக்காபி குடிச்சிட்டுபோனான்'னு ரோட்ல சொல்லிட்டு நடப்பீங்களா? வசந்தகுமாருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. உங்களுக்குன்னு ஒரு மரியாதை வச்சிருக்கிறேன். அதனால நமக்குள்ள எதையாவது பேசாதீங்க. மனசு ரொம்ப சங்கடமா இருக்கு.

Vikatan

அதுல ஒருவர், வசந்தகுமார் இருக்கிறதுனாலதான் ரோடு போடவில்லை என்று என் காதுபடவே பேசுகிறார். நாம எதிர்கட்சியில இருந்து கத்துறோம், மந்திரிகளைப் பார்க்கிறோம், பாராளுமன்றத்தில் பேசுறோம். ஆனா, நீங்க இப்படி பேசுறது ரொம்ப சங்கடமா இருக்கு. இருந்தாலும் காங்கிரஸில் இருப்பதே பெருமை, காங்கிரஸை வளர்ப்பதே கடமைனு இருக்கிறேன். நான் என்றும் உங்களுடன் இருப்பேன்" என உருக்கமாகப் பேசியிருந்தார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

வசந்தகுமார் எம்.பி.
வசந்தகுமார் எம்.பி.

``வருத்தத்துக்கு காரணம் என்ன'' என்று வசந்தகுமாரிடமே கேட்டோம், "நான் கட்சிக்காரங்க கூப்பிடுற எல்லா நிகழ்ச்சிக்கும் போறேன். அவங்க வற்புறுத்துறதுனாலதான் சாப்பிடுறேன். அதைப் பொதுவெளியில் சொல்லிக்காட்டும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு. இப்படிப் பேசுறதுல அர்த்தமே இல்லை என்பதை சொல்லத்தான் அந்தக் கூட்டத்துக்குப் போனேன்" என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு