Published:Updated:

`யாருடைய குரலைப் பிரதிபலிக்கிறார் ரஜினிகாந்த்?!' - நெல்லையில் கொதித்த திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்

``தேசிய கல்விக் கொள்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிவிப்பு உள்ள நிலையில், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது?" எனக் கேள்வி எழுப்புகிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

``தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

திருமாவளவன்
திருமாவளவன்

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் தமிழக அரசுக்குக் கொடுத்த தொடர் அழுத்தத்தின் விளைவாக இது நடந்துள்ளது. இது தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடக்க இது வழிவகுக்கும் என நம்புகிறோம்.

5 மற்றும் 8 -ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த சோதனை முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. மக்களிடம் எந்த அளவுக்கு எதிர்ப்பு வருகிறது என்பதை அறிய இந்த முயற்சி நடந்தது. ஆனால், அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. 

திருமாவளவன்
திருமாவளவன்

அதனால், தனது திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது என்றாலும், தேசிய கல்விக்கொள்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிவிப்பு உள்ள நிலையில், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது. மத்திய அரசைக் காரணம் காட்டி மீண்டும் பொதுத் தேர்வைக்கொண்டு வந்து விடக்கூடாது. அதற்கான உத்தரவாதத்தைத் தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

`போலீஸ் எப்போது எப்படியிருப்பார்கள் எனக் கூற முடியாது!'- மாணவர்களின் சிஏஏ போராட்டம் குறித்து ரஜினி

தேசிய குடியுரிமைச் சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்த்து மக்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்திலும் நிறைய வழக்குகள் உள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முட்டுச்சந்தில் போய் நிற்கிறது. பின்வாங்கவும் முடியாமல் முன்னேறவும் முடியாமல் திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் உண்மை. வீண்பிடிவாதத்தில் இருக்கும் மத்திய அரசை, மக்கள் போராட்டம் பணிய வைக்கும்.

`துணிச்சலான முறைகேடு?!' -  டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஆளும்கட்சியை சாடும் திருமாவளவன்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளால் காலூன்ற இயலவில்லை. அதனால் ரஜினியை நம்பிக் களமிறங்கியிருக்கிறது. அவரும் திட்டமிட்டு மிகவும் கவனமாகச் சர்ச்சைக்குரிய பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே அவர், சங்பரிவார் அமைப்புகளின் குரலைப் பிரதிபலித்து வருகிறார்’’ என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு