Published:Updated:

`உள்ளாட்சித் தேர்தல்... நேரடி தேர்தல் கோரிக்கை!’ - திருமாவின் மேயர் பதவி ஸ்கெட்ச்

நடக்கவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலில், ஒரு மேயர் பதவியையாவது தி.மு.க-விடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்பது வி.சி.க-வின் திட்டம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`மாநகராட்சி மேயர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளை நேரடியாக மக்களே தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்’ என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலை 7-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசிய திருமாவளவன், இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

திடீரென திருமாவளவன் இப்படிக் கூறக் காரணம் என்ன? அந்தக் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். ``தி.மு.க 2006-ல் ஆட்சியில் இருந்தபோது மாநகராட்சி மேயரை கவுன்சிலர்கள்தான் தேர்வு செய்தனர். அப்படித்தான் தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயர் ஆனார். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மேயரை மக்களே வாக்களித்துத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருக்கம் மேற்கொண்டார் ஜெயலலிதா. அதன்படிதான், சைதை துரைசாமி 2011-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக ஆனார். பிறகு 2016-ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, மறுபடியும் மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யும்படி சட்டத்தைத் திருத்தினார்.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: திமுக Vs அதிமுக `கேம் ப்ளான்' என்ன? The Imperfect Show |04-08-2021

ஆனால் அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் 27 மாவட்டங்களுக்கு மட்டும் நடைபெற்றது. மீதமுள்ள ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-குள் நடத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மாவட்ட யூனியன் சேர்மன் பதவிக்கு கவுன்சிலர்களில் ஒருவர்தான் தேர்வு செய்யப்படுவார். இதன்படி பல ஊர்களில் கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும் சேர்மன் பதவிக்கு வாக்குகள் பெறப்பட்டன. குதிரைப் பேரத்துக்கு வழி வகுப்பதால்தான் மாவட்ட சேர்மன் பதவிகளையும் மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கோருகிறார் திருமா. நடக்கவிருக்கும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக சட்டம் திருத்தப்படுமா என்பது கேள்விக்குறியே! எனினும் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யலாம்.

திருமா
திருமா

15 மாநகராட்சிகளில் எட்டுப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர், தூத்துக்குடிப் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மேயர் பதவியைக்கூட பட்டியலின ஒருவருக்குத்தான் தி.மு.க கொடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், சென்னை, வேலூர், தூத்துக்குடி மூன்றில் ஒரு மேயர் பதவியை வி.சி.க-வுக்கு ஒதுக்க திருமாவளவன் கேட்டிருக்கிறார். கவுன்சிலர் மூலம் தேர்வு என்றால், வெற்றிபெற்ற கவுன்சிலர்களில் வி.சி.க-வினர் இடம்பெற்ரிருக்க வேண்டும். அவரை மேயராக்க மற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும். மறைமுகத் தேர்வு என்பதால் கட்சிக் கட்டப்பாட்டை மீறி மாற்றிக்கூட வாக்களிக்க வாய்ப்புண்டு. அதனால்தான், உள்ளாட்சித் தேர்தலில் நேரடித் தேர்தல் கேட்கிறார். வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது" என்றனர்.

”இது நம்ம கெளரவப் பிரச்னை...”
ஆலோசனைக் கூட்டத்தில் கர்ஜித்த ஸ்டாலின்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு