Published:Updated:

"பாமக ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க; ஆனா, ஒரு கட்டத்துல... " - மனம் திறக்கும் வீரப்பன் மகள்

வீரப்பன் மகள் வித்யாராணி

"நான் பாஜகவில் இணைந்தது சரியான முடிவு. அப்பா ரொம்ப பக்தியானவர். அதுதான் என்னை இந்தக் கட்சியில் கொண்டு வந்துவிட்டது"

"பாமக ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க; ஆனா, ஒரு கட்டத்துல... " - மனம் திறக்கும் வீரப்பன் மகள்

"நான் பாஜகவில் இணைந்தது சரியான முடிவு. அப்பா ரொம்ப பக்தியானவர். அதுதான் என்னை இந்தக் கட்சியில் கொண்டு வந்துவிட்டது"

Published:Updated:
வீரப்பன் மகள் வித்யாராணி
வீரப்பன் மறைந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர் குறித்த மர்மங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவை பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வீரப்பன் மகள் வித்யாராணி

"பாஜக நாடு முழுவதும் பிரபலமான கட்சி. அதன்மூலம், மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்துள்ளேன்" என்று கூறி கடந்த 2020-ம் ஆண்டு இதே ஜூலையில்தான் அரசியல் என்ட்ரி கொடுத்தார். இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆனந்த விகடன் நேர்காணலுக்காக வித்யாராணியை, அவர் நடத்திவரும் பள்ளியில் ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். தன் அப்பா வீரப்பன் குறித்து பல்வேறு தகவல்களை மனம் விட்டு பகிர்ந்துகொண்டார்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்க அப்பா இறப்பில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

"அப்பாவோட மரணத்தில் நிறைய சந்தேகம் இருக்கு. அவர் இறப்பாருன்னு நினைச்சே பார்க்கலை. அவர் ஹீரோ இல்லையா? யாராலும் ஜெயிக்க முடியாதுன்னு நினைச்சேன். எப்படியாவது தப்பிச்சி வந்துடுவார்ங்கிற நம்பிக்கை இருந்தது. ஆனா, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை. அந்தக் கடவுளுக்கும் அப்பாவுக்கும் அதிமுக அரசுக்கும்தான் என்ன நடந்துச்சின்னு தெரியும்".

வித்யாராணி
வித்யாராணி

பாமக உங்களுக்கு உறுதுணையாக இருந்த கட்சி. ஆனால், பாமகவில் இணையாமல் பாஜகவில் இணைந்தது ஏன்?

"உண்மைதான். நாங்க குழந்தையாக இருந்தபோதிலிருந்தே பாமக ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க. ஆனா, நாங்க வளர வளர அரசியல் ரீதியாக வெளியில் வரணும்னு அவங்க பெரிசா எதிர்பார்க்கலைன்னு நினைக்கிறேன். அப்பா இறந்தபிறகு அவங்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலையும் அமையலை".

ஆனால், பாஜகவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லையே?

"நான் பாஜகவில் இணைந்தது சரியான முடிவுதான். அப்பா ரொம்ப பக்தியானவர். கடவுள் நம்பிக்கையிலேயே உயிர் வாழ்ந்து இறந்திருக்கார். துவண்டு போன நேரத்தில் அப்பாவை காப்பாற்றியது கடவுள் நம்பிக்கை மட்டும்தான். அதுதான் என்னை இந்தக் கட்சியில் கொண்டு வந்துவிட்டது. இது தானாக நடந்த ஒரு விஷயம். பொன்.ராதாகிருஷணன் அய்யாவை குருவாகப் பார்க்கிறேன். அவர்தான், 'உங்கக் குடும்பம் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு. நீங்க வளர்ந்து வரணும்'னு சொல்லி கட்சியில் இணைய வைத்தார்".

வித்யாராணி
வித்யாராணி

ஏன் இன்னும் தேர்தல்களில் போட்டியிடவில்லை?

"கடந்த சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில், என்னை நிற்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், கூட்டணி தர்மத்தால், அந்தத் தொகுதி பாஜகவுக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால் கண்டிப்பாக என்னை நிற்க வைத்திருப்பார்கள்".

உங்களுக்குப் பிடித்த பெண் தலைவர்?

"ஜெயலலிதா பிடிக்கும். ஆனால், அப்பாவோட விஷயத்தை நினைச்சா கஷ்டமா இருக்கும். எங்களைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா யோசித்திருக்கலாம். இவ்வளவு நல்ல தலைவரா இருந்திருக்காங்க. ஆனா, ஏன் அவசரப்பட்டாங்கன்னு யோசிக்க வைக்குது. அப்பாவோட பாசிட்டிவ் பக்கங்களை ஏன் அவங்கப் பார்க்கலைங்கிற கோவமும் இருக்கு. ஆனாலும், ஒரு பெண்ணாக அவங்களை நினைத்து ரொம்பப் பெருமைப்படுறேன்".

உங்கள் அம்மா... தங்கையிடம் பேசுகிறீர்களா?

"எந்த முக்கியமான நிகழ்வு என்றாலும் நான், அம்மா, தங்கை என கலந்து பேசித்தான் முடிவெடுப்போம். குறிப்பாக, அப்பா சொந்தங்கள் அனைவரிடமும் கலந்தாலோசிப்போம்".

"பாமக ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க; ஆனா, ஒரு கட்டத்துல... " - மனம் திறக்கும் வீரப்பன் மகள்

சமீபத்தில் உங்கப் பெரியப்பா மாதையன் சிறையிலேயே இறந்தாரே அதற்கு, முன்பு அவரை சந்தித்தீர்களா?

"பெரியப்பா இறப்பதற்கு இரண்டு மாதம் முன்பு, உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல அட்மிட் ஆகியிருந்தார். கேள்விப்பட்டவுடனே போய் பார்த்தேன். "அரசியல்வாதிங்கக்கிட்ட சொல்லி எப்படியாவது என்னை வெளியில் கொண்டு வந்துடுங்க. கொஞ்சநாளாவது வெளில இருக்கணும்னு நினைக்கிறேன்"ன்னு சொல்லி ரொம்ப அழுதாரு. அதன்பிறகு, நாங்களும் ஒருசில முயற்சிகள் செய்தோம். ஆனா, அரசு செவி சாய்க்கலை. இரட்டை ஆயுள் தண்டனையையே அனுபவித்துவிட்டார் பெரியப்பா. அவரை கொஞ்சநாள் வெளியில் விட்டிருக்கலாம்".

அப்பா குறித்து ஏதாவது சீக்ரெட்?

"நல்ல விஷயம்னா குட்டி குழந்தை சொன்னாக்கூட அப்பா ஃபாலோவ் பண்ணுவார். நல்லதுக்கு வயது வித்தியாசம் பார்க்காதவர். எல்லோரும் அவரை கொடூரமானவரா நினைக்கிறாங்க. ஆனா, அவர் ரொம்ப நகைச்சுவை உணர்வு கொண்டவர். அப்பாவுக்கு நடிகராக வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. காட்டுக்குள் செல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் நடிகராகியிருப்பார். சிவாஜி அவருக்கு ரொம்பப் பிடிக்கும்".

அவரது நண்பர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர்?

"அப்பா நண்பர்கள் எல்லோரையுமே பிடிக்கும். எல்லா சூழலிலும் அப்பாவோடு பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக நல்ல நட்புக்கு உதாரணம் சேத்துப்பிள்ளை கோவிந்தன்தான். சாகும்போதுகூட கூடவே இறந்திருக்கார்".

பாஜக தலைவராக அண்ணாமலை ஓராண்டு குறித்து?

"அண்ணாமலை சக்தி வாய்ந்தவர். எனக்கு ஒரு அண்ணன் மாதிரி. சரியான நேரத்தில் சரியான தலைவரை பாஜகவுக்கு போட்டிருக்காங்க. அவர், தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது".

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி குறித்து?

"ஸ்டாலின் சாரிடம் நிறைய பாசிட்டிவான விஷயங்களைப் பார்த்திருக்கேன். இன்னும் சில இடங்களில் வேகமாக செயல்படணும். கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி பள்ளி விஷயமே உதாரணம்".