Published:Updated:

அமைச்சர்களின் வாரிசுகளால் வம்புச் சண்டை... வீதிக்கு வந்த தி.மு.க கோஷ்டிப்பூசல்

தி.மு.க கோஷ்டிப்பூசல்
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க கோஷ்டிப்பூசல்

கடந்த தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும் எனக் கூறி ஜெகத்ரட்சகனை அழைத்து வந்ததே நான்தான். அவர் குடும்பத்தில் நாங்களும் ஓர் அங்கம்தான்.

அமைச்சர்களின் வாரிசுகளால் வம்புச் சண்டை... வீதிக்கு வந்த தி.மு.க கோஷ்டிப்பூசல்

கடந்த தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும் எனக் கூறி ஜெகத்ரட்சகனை அழைத்து வந்ததே நான்தான். அவர் குடும்பத்தில் நாங்களும் ஓர் அங்கம்தான்.

Published:Updated:
தி.மு.க கோஷ்டிப்பூசல்
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க கோஷ்டிப்பூசல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க-வில் அமைச்சர்களின் வாரிசுகளால் ஏற்பட்ட வம்புச் சண்டைகள், கோஷ்டி மோதல்களாக வீதிக்கு வந்திருப்பதையடுத்து, கவலையோடு விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது அறிவாலய வட்டாரம்!

இது குறித்துப் பேசுகிற உடன்பிறப்புகள், ‘‘வேலூர் எம்.பி-யும், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனுமான கதிர்ஆனந்த்தின் அதிகாரத்துக்குப் பணிந்து போக மறுக்கிறார் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ-வுமான தேவராஜ். இந்தப் பிரச்னையால், கடந்த 6-9-2022 அன்று எம்.பி-யின் ஆதரவாளரான வாணியம்பாடி நகரச் செயலாளர் சாரதிகுமார் தரப்பும், தேவராஜ் எம்.எல்.ஏ தரப்பும் மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். இரு தரப்பிலும் சிலருக்கு முகம் வீங்கி, உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. இது தொடர்பான, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அறிவாலயம் வரை சென்றன. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி திடீரென வாணியம்பாடிக்கு ‘விசிட்’ அடித்த அமைச்சர் துரைமுருகன், இரு தரப்பினரையும் தனித்தனியாக ஏலகிரி பங்களாவுக்கு அழைத்துச் சென்று பஞ்சாயத்துப் பேசினார். ஆனாலும் தீர்வு ஏற்படவில்லை” என்றனர்.

அமைச்சர்களின் வாரிசுகளால் வம்புச் சண்டை... வீதிக்கு வந்த தி.மு.க கோஷ்டிப்பூசல்

தாக்கப்பட்டவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ ஆதரவாள ருமான வழக்கறிஞர் தேவகுமார் நம்மிடம், ‘‘சாரதிகுமார்மீது எஸ்.பி-யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆளுங்கட்சி விவகாரம் எனச் சொல்லி எஸ்.பி பின்வாங்கு கிறார். நாங்கள் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம்’’ என்றார்.

இது குறித்து சாரதிகுமாரிடம் கேட்டபோது, ‘‘சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்பி, அவர்கள்தான் வம்பிழுக்கிறார்கள். என்னைக் கொலை செய்யவும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். எனவே, துரைமுருகனிடமும், எ.வ.வேலுவிடமும் விளக்கம் அளித்து, அவர்கள்மீது புகார் தெரிவித்திருக்கிறேன்’’ என்றார்.

தேவராஜ், சாரதிகுமார், தேவகுமார்
தேவராஜ், சாரதிகுமார், தேவகுமார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் பற்றிப் பேசுகிற தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘‘அமைச்சரின் மகன் வினோத், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறார். எனவே, தொகுதி எம்.பி-யான ஜெகத்ரட்சகனை ‘வெளியூர்க்காரர்’ எனச் சொல்லி புறக்கணிக்கச் சொல்கிறார். பேனர்களில் ஜெகத் ரட்சகன் படம், பெயரைப் போடக் கூடாது என உத்தரவிட் டிருக்கிறார். அமைச்சரின் உள்விவகாரங்களைக் கவனித்து வருபவர் பெயரும் வினோத். கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர். அவர் ஆதிக்கம் செய்வதோடு, தாய்க்கழக நிர்வாகிகளைப் புறக்கணிக்கிறார்’’ என்று புலம்புகின்றனர்.

இது குறித்து, மாணவரணி அமைப்பாளர் வினோத்திடம் கேட்டதற்கு, ‘‘கட்சிக்குள் நான் எந்த ஆதிக்கமும் செலுத்துவ தில்லை. நாங்கள் எல்லோரும் கலந்தாலோசித்துதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறோம்’’ என்கிறார்.

‘ஜெகத்ரட்சகன் பெயரை இருட்டடிப்பு செய்வதாக உங்கள் மகன் வினோத் மீது புகார் எழுந்துள்ளதே?’ என்ற கேள்வியை அமைச்சர் காந்தியிடம் கேட்டபோது, ‘‘கடந்த தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும் எனக் கூறி ஜெகத்ரட்சகனை அழைத்து வந்ததே நான்தான். அவர் குடும்பத்தில் நாங்களும் ஓர் அங்கம்தான். அதிகாரத் துக்கு வர எங்கள் குடும்பத்தினர் என்றுமே ஆசைப்பட்டதில்லை. உட்கட்சித் தகராறில் சிலர் வேண்டுமென்றே இது போன்ற தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர்’’ என்றார்.

கட்சியில், கோஷ்டிப்பூசல் தடுப்பு அணி ஒன்றை உருவாக்க வேண்டும்போல!