Published:Updated:

`இலவசப் பேருந்து; 10,000 பேருக்கு அன்னதானம்!’ - வேலூரில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்

இலவசப் பேருந்து சேவையை இயக்கியும் 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கியும் ரஜினி பிறந்தநாளில் வேலூர் மக்கள் மன்றத்தினர் அசத்தினர்.

அன்னதானம்
அன்னதானம்

ரஜினியின் 70-வது பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் இன்று கோலாகலமாகக் கொண்டாடிவருகிறார்கள். திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் மக்கள் மன்றம் சார்பில் 11 இடங்களில் ரஜினியின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 

தங்கத்தேர் இழுத்து வழிபாடு
தங்கத்தேர் இழுத்து வழிபாடு

அதில், சுமார் 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர், சிறப்பு வழிபாடு நடத்தினர். 

``நட்சத்திரம் தெரியாத என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கிருக்காங்க!" - `ஏன் தனிமை' ரஜினி #HBDRajini

வேலூரில் உள்ள முதியோர் இல்லத்துக்குச் சென்று அன்னதானம் வழங்கியதுடன் போர்வையும் வழங்கினர். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலிலும் ரஜினிக்காகச் சிறப்பு அபிஷேக பூஜை செய்தனர். இதேபோல், மூன்று மாவட்டங்களிலும் உள்ள பிரசித்திபெற்ற பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இலவசப் பேருந்து சேவை
இலவசப் பேருந்து சேவை

ஆற்காடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து கலவை கிராம பகுதிக்குக் கட்டணமில்லாப் பேருந்து சேவையை இன்று காலை தொடங்கிவைத்தனர். இன்றைக்கு மட்டும் அந்தப் பேருந்தில் யார் வேண்டுமானால் ஏறி இலவசமாகப் பயணிக்கலாம் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிவித்திருந்தனர்.

பேருந்தை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இணைச் செயலாளர் நீதி என்கிற அருணாசலம், ஆற்காடு நகரச் செயலாளர் வரதன் இவர்களோடு மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு இலவசமாகப் பயணித்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

அன்னதானம்
அன்னதானம்

`இதற்காக அந்தப் பேருந்தின் ஒரு நாள் வருமானத்தை தாங்களே தருகிறோம். மாவட்டம் முழுவதும் அடுத்த நான்கு நாள்களுக்கும் அன்னதானம் வழங்குகிறோம்’ என்று மக்கள் மன்றத்தினர் கூறினர். ஆட்டோ ஓட்டுநர்களும் பல இடங்களில் ரஜினி பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர்.