Published:Updated:

விகடன் பொக்கிஷம்: எம்.ஜி.ஆர். சில நினைவுகள் - சோலை

அவையில் பாலசுப்பிரமணியத்தின் பேச்சை வரவேற்ற எம்.ஜி.ஆர்., தனியாக அவரைக் கண்டித்தார்.

பிரீமியம் ஸ்டோரி

27.12.1998 ஆனந்த விகடன் இதழில்

எம்.ஜி.ஆர். அன்று தமிழகத்தின் முதல்வராக சட்டமன்றத்தில் வீற்றிருந்தார்.

பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்கி, கிராம நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் புதிய முறை வர வேண்டும் என்று விரும்பினார். அதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி வீற்றிருந்தார். அவருக்கு அருகில் பேராசிரியர் அன்பழகன்.

அந்த மசோதாவை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்தது. பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்குவதன் மூலம் 24 ஆயிரம் குடும்பங்களின் வீட்டு விளக்குகளை அண்ணா தி.மு. கழகம் அணைத்துவிட்டது என்று கலைஞர் குற்றம் சாட்டினார். அனல் பறக்கும் விவாதம் தொடர்ந்தது.

அண்ணா தி.மு.கழக வரிசையில் அற்புதமாக வாதிடும் திறமை பெற்றிருந்தவர்களில் வி.பி. பாலசுப்ரமணியமும் ஒருவர். வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். வி.பி. பாலசுப்பிரமணியம் எழுந்தார்.

‘பழைய பரம்பரை கிராம அதிகாரிகளை நீக்கிவிட்டு, புதிய கிராம அதிகாரிகளை நியமிக்கும் உத்தரவு 1971-ம் ஆண்டே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அந்த உத்தரவைப் போட்டது தி.மு. கழக அரசுதான். அன்றைய முதல்வர் கருணாநிதிதான்’ என்று பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

விகடன் பொக்கிஷம்: எம்.ஜி.ஆர். சில நினைவுகள் - சோலை

‘புதிய கிராம நிர்வாக அதிகாரிகளை நியமிக்க கருணாநிதி போட்ட நிர்வாக உத்தரவுக்குத்தான் அண்ணா தி.மு.க அரசு சட்ட வடிவம் தருகிறது. அதை தி.மு. கழகம் எதிர்ப்பது என்ன நியாயம்?’ என்று பாலசுப்பிரமணியம் உரையை முடித்தார்.

அவை முடிந்ததும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. அவருடைய வாதத்திறமையை அமைச்சர்களும் மெச்சினர். அவைக்கு அருகில் வசந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. தலைவர் ‘தம்மைப் பாராட்டப் போகிறார்’ என்று பாலசுப்பிரமணியம் எதிர்பார்த்திருக்கக்கூடும்.

அவையில் பாலசுப்பிரமணியத்தின் பேச்சை வரவேற்ற எம்.ஜி.ஆர்., தனியாக அவரைக் கண்டித்தார்.

‘‘தக்க சமயத்தில் தக்க விளக்கம் தந்தாய்.ஆனால் மூச்சுக்கு முந்நூறு தரம் கருணாநிதி, கருணாநிதி என்று அவர் பெயரைச்சொல்லி அழைத்தாயே? அவருடைய வயது என்ன? உன் வயது என்ன? அவருடைய அரசியல் அனுபவம் என்ன? உன் அனுபவம் என்ன?’’ என்று எம்.ஜி.ஆர் அக்கினிச் சொற்களை அள்ளி வீசினார். பாலசுப்பிரமணியம் ஆடிப் போய்விட்டார்.

‘‘நீங்கள் என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்ட எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர், தெரியுமா?” என்று கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.

இந்த நிகழ்ச்சி ராமாவரம் தோட்டத்தில் நடந்தது. எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருவர் இன்டர்காமில் மாடியிலிருந்த எம்.ஜி.ஆருக்கு சில தகவல்கள் சொன்னார். அரசியல் தகவல்கள்தான்.

‘‘நிறுத்து. நீ சாப்பிட்டாயா?’’ என்று கோபம் கொப்பளிக்க கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘இல்லை’’ என்றார் உதவியாளர். ‘‘சாப்பிட்டு விட்டுப் பேசு’’ என்றார் எம்.ஜி.ஆர்.

அவர் சாப்பிட்டுவிட்டார் என்பதை சமையலறையில் உறுதிசெய்துகொண்டார். பின் மீண்டும் உதவியாளரை அழைத்தார். ‘‘நீ எப்படி கருணாநிதி கருணாநிதி என்று அவரைப் பெயரிட்டுச் சொல்லலாம்? நீ டிஸ்மிஸ்... ஓடு’’ என்று உத்தரவு போட்டார். மீண்டும் அந்த உதவியாளர் பணியில் சேர பல வார காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

விகடன் பொக்கிஷம்: எம்.ஜி.ஆர். சில நினைவுகள் - சோலை

மதுரையிலிருந்து கலைஞர் திருச்செந்தூருக்கு நடைபயணம் சென்றார். அன்றைக்கு அவர் எதிர்க்கட்சித் தலைவர். அந்தப் பயணம் அண்ணா தி.மு.கழக அரசுக்குத் தற்காலிகத் தலைவலிதான்.

விருதுநகரைக் கடந்து செல்லும்போதே கலைஞருக்குக் காலில் கொப்பளங்கள் என்று தகவல் வந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் ஆனாலும் காலில் கட்டுப் போட்டு நடைபயணத்தை கலைஞர் தொடர்கிறார் என்றும் சேதிகள் வந்தன.

அப்போது மாம்பலத்தில் உள்ள தமது அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் இருந்தார். அவருக்கு மதிய உணவு பரிமாற முத்தண்ணன் தயாராக இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் தனது அறையை விட்டு வெளிவரவில்லை. எம்.ஜி.ஆருடைய அழைப்பின் பேரில் நானும் காத்திருந்தேன்.

முத்தண்ணன் தைரியம் சொன்னார். ‘‘லேசாகக் கதவைத் தட்டிவிட்டு நீங்கள் அறையைத் திறங்கள்’’ என்றார். அச்சத்தோடு அவ்வாறே செய்தேன். ‘‘உள்ளே வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர் அழைத்தார்.

‘‘மணி ஒன்றரை. இன்னும் நீங்கள் சாப்பிடவில்லையே..?’’ என்றேன்.

‘‘அதைவிட முக்கியமான ஒரு வேலை.நடைபயணம் சென்ற கலைஞரின் காலில் ரத்தம் கசிகிறதாம். தற்போது அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். சிவகாசியில் தங்கப் போகிறாராம். அவருடன் பேசிய பின்னர்தான் உணவு. உங்களுக்குப் பசி தாங்காது, நீங்கள் சாப்பிடுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

சற்று நேரத்தில் கலைஞருடன் தொலைபேசித் தொடர்பு கிடைத்ததுமே உடல்நலம் பற்றி கரகரத்த குரலில் விசாரித்தார். ‘‘டாக்டர்களை உடன் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். தம்முடன் டாக்டர்களும் பயணம் செய்வதாக கலைஞர் கூறினார்.

நடைபயணத்தை விடுத்து வேறு விதமாக கலைஞர் தமது பயணத்தைத் தொடரலாம் என்பது எம்.ஜி.ஆரின் கருத்து. ஆனால் அதைச் சொல்ல அவருக்கு வாய் வரவில்லை. வார்த்தைகளும் வரவில்லை.

‘‘சோலை... நான் கலைஞரின் உடல்நலம் பற்றி விசாரித்தது உங்கள் ஒருவருக்குத்தான் தெரியும். எந்தக் காரணம் கொண்டும் ஏடுகளில் இது செய்தியாக வரக்கூடாது. எங்களுடைய நட்பு அத்தகையது. என்னுடைய இந்த முன்னேற்றத்திற்குக் கலைஞரும் ஒரு காரணம்’’ என்றார்.

***

தாலிச் சரண் - நாஞ்சில் நாடன்

18.11.2001 ஆனந்த விகடன் இதழில்...

குறிப்பு: நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர் நாஞ்சில் நாடன். நாஞ்சில் பிரதேச மக்களும் குமரி மாவட்டத்து மண்ணும் கலந்து உருவானவை இவருடைய படைப்புகள். இயற்பெயர் சுப்பிரமணியன். வேலை காரணமாகப் பல வருட காலம் மும்பையில் வசித்தவர். இவரின் ‘தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்’ சிறுகதைத் தொகுதி, புகழ்பெற்றதொரு தொகுப்பு. இவரின் முக்கியமான நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்.’ இதைத்தான் இயக்குநர் தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்தார். மிதவை, பேய்க்கொட்டு, சதுரங்கக் குதிரைகள், என்பிலதனை வெயில் காயும், எட்டுத் திக்கும் மதயானை என நாஞ்சில் நாடனின் பல நாவல்கள் பிரபலமானவை. இவரது ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்கு 2010-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

விகடன் பொக்கிஷம்: எம்.ஜி.ஆர். சில நினைவுகள் - சோலை

கதையிலிருந்து...

ரத்தம் செத்துப்போன கிழவர்கள் கடைசிக் காலத்தில் தன்னைப் பார்க்க ஆளில்லை என்றோ, மருமக்கள்மாரின் உதாசீனம் தாங்காமலோ, பதினாறு வயது பாவப்பட்ட குமருகளை வயலும் தோப்பும் எழுதிக்கொடுத்து, `அடுக்களைத் தாலி’ கட்டி இரவோடிரவாகக் கூட்டிக்கொண்டு வருவார்கள் வில்வண்டிகளில்.

``விழுந்து கும்பிடம்மா மாமாவை...’’


மஞ்சள் நூலில் கோக்கப்பட்டிருந்த தாலி...

முழுக்கதையையும் வாசிக்க...

https://bit.ly/ShortStory08

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு