Published:Updated:

"நாம் தமிழர் ஆட்சி வந்தால் தமிழகம் வெற்றி நடைபோடும்!"- சீமான்... உங்கள் கருத்து? #VikatanPoll

சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வெற்றி நடைபோடும் என சீமான் கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை அடுத்த முடிகரை எனும் கிராமத்திலுள்ள வீரகாளி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகனுக்குக் காதணி விழா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்காக அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பினார். மதுரை எய்ம்ஸ் தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை நிறுத்தியது, பெட்ரோல், டீசல் விலை எனப் பலவற்றைக் குறித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், "நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகம் வெற்றி நடைபோடும்" என்றும் தெரிவித்துள்ளார். இது அ.தி.மு.க-வின் தேர்தல் பிரசார விளம்பரமான 'வெற்றி நடைபோடும் தமிழகமே' என்பதைப் பகடி செய்யும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு