Published:Updated:

"நாங்க மீடியாதான் என்பதை அவர் கண்டுபிடித்துவிட்டார்!" - திக் திக் காஷ்மீர் கள அனுபவம்!

சுற்றுலா தலமான அந்த ஏரி மிகவும் வெறிச்சோடி கிடந்தது. ஏரியை சுற்றிலுமே பலத்த பாதுகாப்பு. ஒரு சுற்றுலா தலத்தில் சுற்றுலாப் பயணிகளே இல்லாததே பயத்தை ஊட்டியது.

காஷ்மீர்
காஷ்மீர்

உலக நாடுகளில் சீனாவை 'இரும்புத்திரை தேசம்' என்பார்கள். இப்போது காஷ்மீர் மாநிலமும் அப்படித்தான் ஆகிவிட்டது. இந்த மாநிலம் நம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று 80 நாள்களுக்குமேல் ஆகிவிட்டது. நாட்டின் பெரும் தலைவர்கள்கூட இயல்பாக அங்கு செல்ல முடியவில்லை. அப்படியே சென்றாலும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரும், வீட்டுக்குள் 'பத்திரமாக' வைக்கப்பட்டிருக்கிறார்கள். செய்தி சேனல்கள், பத்திரிகைகள் அத்தனையும் கிட்டத்தட்ட முடக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில்தான் தொலைதொடர்பு வசதிகளைக் கொடுத்திருக் கிறார்கள். இணையம் இன்னும் வரவில்லை. பள்ளிகள் திறக்கப்படவில்லை. ரயில்நிலையங்கள், பேருந்துநிலையங்கள் மூடிக்கிடக்கின்றன. பெரும்பாலான கடைகளும் சந்தைகளும் மூடி இருக்கின்றன. தங்கும் இடங்கள், உணவகங்கள் கிடைப்பது அரிது.

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில், கடந்த பத்து நாள்களாகத்தான் மக்கள் ஓரளவு நடமாடத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அத்தனையும் கடும் கண்காணிப்பு களுக்கு உட்பட்டவை; கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. அங்கு வசிக்கும் இந்தியத் திருநாட்டுக் குடிகளின் ஒவ்வோர் அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பத்தடிக்கு ஒரு ராணுவ வீரர் நிற்கிறார். அவரின் கையில் நவீனரக ரைஃபிள் மின்னுகிறது; முகம் இயல்பாக இல்லை, இறுக்கம் அப்பியிருக்கிறது. 'கட்டளையே சாசனம்' என்றரீதியில் வந்துவிழுகின்றன அவர்களின் வார்த்தைகள். இந்தப் பூவுலகில் ஆகச்சிறந்த ஆப்பிள் தேசம், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி, இயற்கை அழகின் உச்ச தேசம்... இன்று சிறைக்குள் அடைப்பட்டிருக்கிறது.

இப்படியான சூழலில்தான் விகடன் செய்தி ஆசிரியர் பாலகிஷன், புகைப்படம் மற்றும் வீடியோ டீம் ஹெட் கே.கார்த்திகேயனுடன் காஷ்மீரின் கள நிலவரத்தை அறிய நேரில் சென்றார். அதன் லைவ் ரிப்போர்ட் - குறுந்தொடரில் இருந்து...

"பயணம் தொடங்கியது. நானும் புகைப்படக்காரர் கார்த்திகேயனும் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திலிருந்து டெல்லி சென்றோம். ஒன்றாகச் சென்றாலும் இருவருக்கும் தனித்தனி டிக்கெட். 'இருவருமே டூரிஸ்ட். காஷ்மீரைப் பொறுத்தவரை நான் யாரோ, நீங்கள் யாரோ' என்பதையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டோம்.

"நாங்க மீடியாதான் என்பதை அவர் கண்டுபிடித்துவிட்டார்!" - திக் திக் காஷ்மீர் கள அனுபவம்!

ஸ்ரீநகர் விமானநிலையம்... நேரம் காலை 10.57. ராணுவத் தளத்துக்கு நடுவே நிற்பதுபோல் இருந்தது அந்த இடம். ஏராளமான ராணுவ அதிகாரிகள். இந்தியைத் தவிர வேறு மொழியையே கேட்க முடியவில்லை. அதில் தமிழ் ஜாடைகொண்ட ஒரு முகம் தட்டுப்பட்டது. 'தமிழரோ' என்ற ஆர்வத்துடன் அவரும் நம்மைப் பார்க்க, மையமாகச் சிரித்துவைத்தேன். நல்லவேளையாக அவரும் தமிழர்தான். அவரிடமும், ''சுற்றிப்பார்க்க வந்தேன்'' என்றேன். அதிர்ச்சியுடன் ஏறிட்டுப் பார்த்தவர், ''ஏன் சார் இப்படி பொறுப்பு இல்லாம இருக்கீங்க. இங்க நிலைமை தெரியாதா உங்களுக்கு... கவர்மென்ட் சொன்னா வந்திடுவீங்களா? கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் சுடச்சொல்லி உத்தரவு. உயிருக்கு உத்தரவாதமில்லை... உடனே கிளம்புங்க!'' என்றார்.

தூக்கிவாரிப்போட்டது! விரிவாக வாசிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2prShBu

****

சுற்றுலா தலமான அந்த ஏரி மிகவும் வெறிச்சோடி கிடந்தது. ஏரியை சுற்றிலுமே பலத்த பாதுகாப்பு. ஒரு சுற்றுலா தலத்தில் சுற்றுலாப் பயணிகளே இல்லாததே பயத்தை ஊட்டியது. ஒரு படகுக்காரர் வாடகைக்கு வர முன்வந்தார். படகில் ஏறினோம். அரை மணிநேரம் வலம்வந்தோம். நான் மெதுவாகப் பேச்சுக்கொடுத்துக்கொண்டே என் கேமராவே வெளியே எடுத்தேன். எடுத்த உடனே அந்தப் படகுக்காரர் என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி: "நீங்க மீடியாவா?".

"இல்லீங்க, நான் டூரிஸ்ட்" என்றதும் அவர் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தார். "டூரிஸ்ட்லாம் இங்க யாருமே கிடையாது சார். நீங்க நிச்சயம் மீடியாவா இருக்கணும்; இல்லன்னா, யாருக்காவது கெஸ்டா வந்திருக்கணும்"னார். நான் எவ்வளவு சொல்லியும், கடைசி வரை என்னை ஒரு டூரிஸ்டாகவே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

"நாங்க மீடியாதான் என்பதை அவர் கண்டுபிடித்துவிட்டார்!" - திக் திக் காஷ்மீர் கள அனுபவம்!

கேமராவை எடுத்தவுடன், அவர் என்னை எச்சரித்தார்.

"சார், அங்க இருந்து பாத்தாங்கன்னா, எனக்கும் பிரச்னையாகிடும் சார். தயவு செஞ்சு கேமராவை உள்ள வைங்க. இங்கெல்லாம் கேமராவே யூஸ் பண்ணக் கூடாது" என்று வலியுறுத்தினார்.

காஷ்மீர் சாலைகளில் பயணிப்பதே அச்சுறுத்தலுக்குரிய ஒன்றாகவே காணப்பட்டது. பொது இடத்தில் யாராவது இயல்புக்கு மாறாக, தெரியாமல் நடந்துகொண்டால்கூட அவ்ளோதான்!"

*

வெளியே, அவ்வளாக மக்கள் நடமாட்டம் இல்லை. சுருள்சுருளாக முள்கம்பிகள் பயமுறுத்தின. அதைத் தொட்டுப்பார்த்தேன். பயங்கர கூர்மை. லேசாக அழுத்தித் தேய்த்தால் விரலே அறுந்துவிடும். அதன் பெயர் `கான்செர்டினா காயில்’ (Concertina Coil). பிரத்யேகமான உலோகத்தில் செய்கிறார்கள். நவீன கருவிகளைப் பயன்படுத்தினாலும் அவ்வளவு எளிதில் அதை கட் செய்ய முடியாது.

"நாங்க மீடியாதான் என்பதை அவர் கண்டுபிடித்துவிட்டார்!" - திக் திக் காஷ்மீர் கள அனுபவம்!

வெயில் கொஞ்சம் தணிந்திருந்தது. எனக்குத் தெரிந்த ஓர் அதிகாரிக்கு போன் செய்தேன். `‘வெல்கம் வெல்கம் வெல்கம்... நம் தேசத்தின் புத்தம்புதிய காஷ்மீருக்கு உங்களை வரவேற்கிறேன்’’ என்றவர், மிகவும் பலமாக `‘ஹாஹாஹா...’’ என்று சிரித்தார். அவரின் சிரிப்புக்குப் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். பிறகு, `‘என் காரை அனுப்பி வைக்கவா?’’ என்று கேட்டவர், அவராகவே மறுத்து, “வேண்டாம். அதில் அரசாங்க முத்திரை இருக்கிறது. பாதுகாப்பு இல்லை. பயங்கரவாதிகள் தாக்கக்கூடும். ஏன்... மக்களில் சிலரே கல் எறியலாம். பிரைவேட் டாக்ஸியைப் பிடித்து வந்துவிடுங்கள். டாக்ஸி கிடைக்க லேட் ஆகலாம். வேறு வழியே இல்லை என்றால் சொல்லுங்கள்... சமாளித்து நானே வந்துவிடுகிறேன்” என்றார். அவர் வருவது, நம்முடன் ஒன்றாகப் பயணிப்பது நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், அவருக்குத்தான் அது பிரச்னை. டாக்ஸியைத் தேடத் தொடங்கினோம்.

> விகடன் செய்தி ஆசிரியர் பாலகிஷன், புகைப்படம் மற்றும் வீடியோ டீம் ஹெட் கே.கார்த்திகேயன் ஆகியோரது நேரடி அனுபவத்தை நேர்காணல் வீடியோ வடிவில் காண...

- இந்தப் பகுதியின் முழுமையான வடிவத்தை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மினி தொடர்: இரும்புத்திரை காஷ்மீர்! - இரும்புத்திரை காஷ்மீர்! - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு!" - ஜூவி லைவ் ரிப்போர்ட் https://www.vikatan.com/news/general-news/jv-live-thrill-report-from-kashmir-mini-series

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |