Published:Updated:

உட்கட்சித் தேர்தல்: ``அம்மா இருந்திருந்தா இப்படி நடக்காது..." - அதிமுக நிர்வாகி தர்ணாவால் பரபரப்பு!

தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி ( தே.சிலம்பரசன் )

விழுப்புரத்தில் அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் விண்ணப்பத்துக்கு பணம் கட்ட முயன்ற நிர்வாகியை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

உட்கட்சித் தேர்தல்: ``அம்மா இருந்திருந்தா இப்படி நடக்காது..." - அதிமுக நிர்வாகி தர்ணாவால் பரபரப்பு!

விழுப்புரத்தில் அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் விண்ணப்பத்துக்கு பணம் கட்ட முயன்ற நிர்வாகியை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி ( தே.சிலம்பரசன் )

அ.தி.மு.க கட்சி ரீதியிலான 25 மாவட்டங்களில், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், இன்றைய தினம் விண்ணப்ப கட்டணம் செலுத்தி படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க பொருளாளர் J.P.அன்பழகன் என்பவர் விண்ணப்பம் வாங்க வந்தபோது, அவரை விண்ணப்பத்திற்கு பணம் கட்ட விடாமல் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான சி.வி.சண்முகம் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், நியாயம் கேட்டு மாவட்ட அ.தி.மு.க அலுவலகம் முன் ஓ.எஸ்.மணியனின் காரை மறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இது தொடர்பாக J.P.அன்பழகனிடம் பேசினோம். ``நான் 1977-ல இருந்து அ.தி.மு.க கட்சிகாரன். எம்.ஜி.ஆர்., அம்மா., ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்-னு தொடர்ச்சியா அ.தி.மு.க-வுல தான் பயணிச்சிக்கிட்டு இருக்கேன். நான் கோலியனூர் ஒன்றிய பொருளாளராகவும், கப்பூர் கிளைக் கழக செயலாளராகவும் இருந்தேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கிளைக் கழகத்துக்கு உட்கட்சித் தேர்தல் நடந்துச்சி. அப்போ, என்னுடைய கிளைக் கழக செயலாளர் பதவிய பிடுங்கி எங்கப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்துட்டாரு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னை ஏன் அந்த பொறுப்பிலிருந்து எடுத்தீங்க. தப்பு ஏதாவது பண்ணி இருந்தா சொல்லுங்க. என் பொண்ணுக்கு போன வருஷம் இறுதியில கல்யாணம் பண்ணும்போது கூட உங்க தலைமையில தானே கல்யாணம் பண்ணேன். அதுக்குள்ள எதுக்கு என்ன எடுத்தீங்கனு அவருகிட்ட கேட்டதுக்கு, `உனக்கு அடுத்த பொறுப்பு போடுறேன் போ...' அப்படின்னு சொல்லிட்டாரு முன்னாள் அமைச்சர். இன்னிக்கு... ஒன்றிய பொறுப்புகான தேர்தல் நடக்குது. அம்மா, எனக்கு கொடுத்த கோலியனூர் ஒன்றிய பொருளாளர் பொறுப்புல நான் இருக்கிறதால இந்தத் தேர்தலில் விண்ணப்பத்திற்கு பணம் கட்ட போனேன்.

J.P.அன்பழகன்
J.P.அன்பழகன்

எங்க ஒன்றியத்துக்கு ஒரு தனியார் மண்டபத்தில நடந்துச்சு. அங்க, நான் பணம் கட்ட போனப்போ... `முன்னாள் அமைச்சரை போய் பாருங்க. அவர் சொன்னா தான் நாங்க விண்ணப்பத்துக்கு பணம் வாங்குவோம்'னு சொல்லிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனே மாவட்ட கட்சி ஆபீஸ்ல இருந்த முன்னாள் அமைச்சர் போய் பார்த்து, அண்ண! உங்களை கேட்டுகிட்டு பணத்தை கட்ட சொல்றாங்க. இல்லன்னா வாங்க மாட்டோங்கறாங்கனு சொன்னேன். அதுக்கு, `நீ எதுவும் கட்ட வேண்டாம். எதுக்கு பணம் கட்ட போற. நான் பாத்துக்கறேன் போ' என்றார். அதற்கு நான், ஏற்கெனவே இருந்த கிளை செயலாளர் பொறுப்பையும் எடுத்துட்டீங்க. இப்போ ஒன்றிய பொருளாளர் பொறுப்புக்கும் பணம் கட்ட வேண்டாம் என்றால் எப்படி. நான் பணம் கட்டுறேன். நீங்க பொறுப்பு போடுங்க, போடாம போங்க. அந்த பணம் கட்சிக்கு கூட போகட்டும். பணமே கட்டவேண்டாம் என்று ஆதிக்கம் செஞ்சா என்னதான் அர்த்தம். இவ்ளோ நாளா கட்சியில பயணிச்ச என்னை ஏன் இப்படி பண்றீங்கனு கேட்டேன். அப்போ அங்க இருந்த சில பேர் என்ன பிடிச்சி வெளியே இழுத்துட்டு வந்து விட்டுட்டாங்க. அந்த ஆதங்கம் தாங்க முடியாம தான், தேர்தல் பொறுப்பாளர் ஓ.எஸ்.மணியன் காரை மறிச்சி உக்காந்துட்டேன்.

சம்பவ இடத்தில் ஓ.எஸ்.மணியன்
சம்பவ இடத்தில் ஓ.எஸ்.மணியன்

எந்த விஷயமா இருந்தாலும் நான் வெளிப்படையாக கேட்டிடுவேன். அது அவங்களுக்கு ஆக மாட்டேங்குது. அதேபோல நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாலும் ஒதுக்க பாக்குறாங்க.

"வேட்டி கட்டினவன் எல்லாம் எட்டப்போ... இனி பேண்ட் போட்டவன் தான் கட்சியில அரசியல் பண்ணனும்" அப்படின்னு முன்னாள் அமைச்சரின் அண்ணன் ராதாகிருஷ்ணன் எப்பவுமே சொல்லுவாரு. அதுக்கு ஏத்த மாதிரி தான் இப்ப இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க.

என்ன மாதிரி பழைய கட்சிக்காரங்க எத்தனையோ பேர் வெளியில சொல்ல முடியாம மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு போறாங்க. என்னால அப்படி இருக்க முடியாம தான் வெளிப்படையா கேட்டுட்டேன். 1988-ல அம்மாவைச் சந்திச்சு சட்டமன்றத் தேர்தலில் நிக்கிறதுக்கு சீட்டு கேட்டு, பணம் கூட கட்டியிருக்கேன். எனக்கு எம்.எல்.ஏ சீட்டு கொடும்மா... அப்படின்னு அவங்க கிட்டயே கேட்டிருக்கேன். இந்த மாதிரி நீண்ட நாளா இருக்கிற கட்சிக்காரன் நான், என்ன எடுக்குறாங்க..! இப்போ இருக்கிற மாவட்டச் செயலாளர் ரொம்பவே ஆதிக்கம் பண்ணுகிறார்.

தலைமை பேச்சுக்கு இவர் கட்டுப்பட்டு நடக்கல. இவருக்கு இணக்கமானவங்களுக்கு மட்டும் பொறுப்பு போட்டு கொடுக்கிறார். "நாங்க தான் கட்சி... நாங்க சொல்றது தான். இருந்தா இருந்த இரு... இல்லனா போ"னு இருக்கிறாங்க. நாங்க இதையெல்லாம் யாருகிட்ட போய் சொல்றதுன்னு தெரியல. அம்மா இருந்தா இதெல்லாம் நடக்காது. அம்மா கிட்ட ஒரு முறை சொன்ன போதும். அதுக்கான விசாரணை கண்டிப்பா நடக்கும்.

ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்
ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்

இப்போ இருக்கிற ரெண்டு பேரையும் நேர்ல பார்க்க கூட முடியல. அப்படி நேர்ல போய் பார்த்தாலும்... அவங்க சொல்றதுக்கு, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் கட்டுப்பட மாட்டார்" என்றார் ஆதங்க குரலில்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தொடர்பு கொள்ள முயன்றோம். அழைப்பு ஏற்கப்படாததினால், அவர் தரப்பு ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். ``தர்ணாவில் ஈடுபட்ட நபர், கட்சியிலேயே இல்லை. நினைத்தால் போவார், நினைத்தால் வருவார்" என்றார் தடாலடியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism