Published:Updated:

மைக் ப்ளீஸ்!

மைக் ப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மைக் ப்ளீஸ்!

ரஜினி சாரிடம் நேராகப் போய் ஆதரவு கேட்கலைன்னாலும், அவரது ஆதரவு என்னிக்குமே எனக்கு உண்டு

``அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தால், ஒன்று கூவத்தூர் சென்றுவிடுவார்கள். இல்லை பா.ஜ.க-வுக்குச் சென்றுவிடுவார்கள்!” - உதயநிதி ஸ்டாலின்

மைக் ப்ளீஸ்!

“ரஜினி சாரிடம் நேராகப் போய் ஆதரவு கேட்கலைன்னாலும், அவரது ஆதரவு என்னிக்குமே எனக்கு உண்டு. அது எனக்கு நன்றாகவே தெரியும்.” - குஷ்பு

மைக் ப்ளீஸ்!

`` ‘இந்தத் தேர்தலோடு அ.தி.மு.க காணாமல்போகும்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசிவருகிறார். ஆனால், இந்தத் தேர்தலோடு தி.மு.க இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும்!” - எடப்பாடி பழனிசாமி

மைக் ப்ளீஸ்!

``நாங்கள் கட்டடத்துக்கு வெள்ளையடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல. கட்டடத்தை ஒட்டுமொத்தமாக அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வந்த புரட்சிவாதிகள்.” - சீமான்

மைக் ப்ளீஸ்!

“அரசியலில் ‘நட்பு, நன்றி’ என்கிற வார்த்தைகளுக்கான அர்த்தமே பலருக்குத் தெரியலை. கடைசி வரை அந்த வார்த்தைகளுக்குப் பாத்திரமா நான் இருந்துட்டா போதும்.” - சசிகலா

மைக் ப்ளீஸ்!

“அரசுப் பணத்தில் நான் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. என் சொந்தப் பணத்தில்தான் செல்கிறேன். அதற்காகவே ‘பிக் பாஸ்’ போன்ற நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது!” - கமல்ஹாசன்

மைக் ப்ளீஸ்!

“ `குடும்பத்துக்கு ஒரு ரயில், விமானம் கொடுக்கப்படும்’ என அறிக்கைவிட வாய்ப்புள்ளது. ஏனென்றால், சாகும்போதுதான் சிலர் `சங்கரா... சங்கரா...’ என்பார்கள். அதுபோல ஆட்சி போகவிருக்கும் நிலையில் இஷ்டத்துக்கு அறிவிக்கிறார்கள்!” - மு.க.ஸ்டாலின்

மைக் ப்ளீஸ்!
மைக் ப்ளீஸ்!

“வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வேலையை பா.ஜ.க செய்துவருகிறது. இதற்கெல்லாம் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பயப்படப்போவதில்லை!” - கனிமொழி