Published:Updated:

`தேசபக்தரான கோலி, அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும்! -பா.ஜ.க எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

பா.ஜ.க எம்.எல்.ஏ
பா.ஜ.க எம்.எல்.ஏ

குறிப்பிட்ட வெப் சீரிஸின் ஒளிபரப்பைத் தடை செய்ய வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பாலிவுட் நடிகையும் தயாரிப்பாளருமான அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில், கடந்த 15-ம் தேதி அமேஸான் பிரைமில் வெளிவந்த வெப் சீரிஸ் 'Paatal Lok'. விறுவிறுப்பான கதை, நிழல் உலகின் கதைக்களம் எனப் பல தரப்பு மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இந்த சீரிஸ்.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில், அந்த வெப் சீரிஸில் தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் தன்னுடைய புகைப்படத்தை வைத்து காட்சிப்பதிவு செய்துள்ளதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நந்த்கிஷோர் குர்ஜார், காவல் துறையில் புகார் அளித்துள்ளார். வகுப்புவாதத்தை ஊக்குவிப்பதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டி புகாரைப் பதிவுசெய்துள்ளார். மேலும், தொடரின் ஒளிபரப்பைத் தடை செய்ய வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், அனுஷ்கா ஷர்மாவின் கணவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி, அனுஷ்காவை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, ``விராட் கோலி ஒரு தேசபக்தர். மேலும், இந்தியா மீது மரியாதை உடையவர். எனவே, அவர் அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும்” என்று கூறி அதிர வைத்திருக்கிறார். இவரது இந்தக் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா

இதனிடையே விரன் ஸ்ரீ குருங்முன் என்பவர், அனுஷ்கா ஷர்மா தயாரித்துள்ள இந்த சீரிஸில் சாதிய விஷயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இருப்பினும், அனுஷ்கா தனது தயாரிப்பு வெற்றிபெற்றுள்ள ஆனந்தத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது. PaatalLok முதல் சீசனுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாவது சீசன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு