Published:Updated:

திமுக முப்பெரும் விழா: பட்டம்புதூர் மைதான சென்டிமென்ட்; பிரமாண்ட வடிவமைப்பு - ஸ்பாட் ரிப்போர்ட்

திமுக முப்பெரும் விழா

"முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி ஏ.டி.ஜி.பி. மேற்பார்வையில், தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் இரண்டு டி.ஐ.ஜி. 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து கவனித்து வருகின்றனர்".

திமுக முப்பெரும் விழா: பட்டம்புதூர் மைதான சென்டிமென்ட்; பிரமாண்ட வடிவமைப்பு - ஸ்பாட் ரிப்போர்ட்

"முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி ஏ.டி.ஜி.பி. மேற்பார்வையில், தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் இரண்டு டி.ஐ.ஜி. 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து கவனித்து வருகின்றனர்".

Published:Updated:
திமுக முப்பெரும் விழா

விருதுநகரில் தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பட்டம்புதூரில் விழாவுக்கான மேடை ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தி.மு.க சார்பில் இதே இடத்தில்தான் தேர்தல் தொடர்பான மாநாடு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 38 தொகுதிகளையும் வென்று சாதனை படைத்தது. எனவே, சென்டிமென்ட் ரீதியாக பட்டம்புதூர் மைதானம் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானதாக கூறப்படுகிறது.

கோட்டை வரவேற்பு அமைப்பு
கோட்டை வரவேற்பு அமைப்பு

இந்தநிலையில், 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட மாநாடாகவும் தி.மு.க. முப்பெரும் விழா கருதப்படுகிறது. எனவே முப்பெரும் விழாக்கான மாநாட்டையும் பட்டம்புதூரிலேயே நடத்த தி.மு.க.தலைமை கழகம் முடிவு செய்ததாம். இந்த விழாவுக்காக, உள்ளூரிலிருந்து மட்டும் 50ஆயிரம் பேரை திரட்ட விருதுநகர் தி.மு.க மாவட்ட கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள்‌ தலைமையில் சிறப்பு பஸ்கள் மூலமும் குறைபட்சம் 200 பேரையாவது அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பட்டம்புதூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில், தலைவர்களை குறிக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி ஆகியோரின் தலை உருவங்கள் சிறப்பு வடிவமைப்புடன் செய்யப்பட்டுள்ளன. விழா நுழைவு வாசல் கோட்டை போல அமைக்கப்பட்டு அரண்மனைக்குள் நுழைவது போன்றதொரு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. விழாப்பகுதியில் வி.ஐ.பி.கள், கூட்டணிக்கட்சியினர், சொந்தக் கட்சியினர், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியே கவனிக்க ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தி.க. தலைவர்கள்
தி.க. தலைவர்கள்

விழா வரவேற்புக்காக வாழைமர தோரணங்கள், தென்னை இளங்குருத்துகள், செண்டைமேளம், இன்னிசை நிகழ்ச்சி, கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், உணவு, டீ, பிஸ்கட், வாட்டர் பாட்டில் என பலவகை முன்னேற்பாடுகளும் தயார்நிலையில் வைப்பட்டுள்ளது. கட்சி சார்ந்து நடைபெறும் முப்பெரும் விழா என்பதால் மாவட்ட அமைச்சர்கள் என்ற முறையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பிரமாண்டங்களுக்கு குறைவில்லாமல் விழாவை நடத்த தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

விழாவின் மூலமாக தொகுதியில் தங்களுக்கான‌ பலத்தைக்காட்டி முதல்வரின் அன்புக்கு மிக நெருக்கமானவர்களாக காட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மற்ர அமைச்சர்களை பிரமிக்க செய்யும் விதத்திலும், குறை சொல்லமுடியாத வகையிலும் தனி கவனிப்புகள் செய்யவிருப்பதாக தி.மு.க. தொண்டர்கள் கூறுகின்றனர்.

முகப்பு முழுத்தோற்றம்
முகப்பு முழுத்தோற்றம்

முதல்வரின் வருகையொட்டி ஏ.டி.ஜி.பி. மேற்பார்வையில், தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் இரண்டு டி.ஐ.ஜி, 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து கவனித்து வருகின்றனர். இதற்காக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முதல்வரின் வருகையையொட்டி, முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.