Published:Updated:

`கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்!'- உத்தரபிரதேச பா.ஜ.க எம்பியால் கொதிக்கும் மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க எம்.பி-க்கள் தம்மைத் தாக்கியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காங்கிரஸ் எம்.பி-யான மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

`கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்!'- உத்தரபிரதேச பா.ஜ.க எம்பியால் கொதிக்கும் மாணிக்கம் தாகூர்

நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க எம்.பி-க்கள் தம்மைத் தாக்கியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காங்கிரஸ் எம்.பி-யான மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

Published:Updated:
மாணிக்கம் தாகூர்

விருதுநகர் தொகுதி எம்.பி-யான மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவர், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் உள்ளார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-யான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது புகார் எழுப்பியுள்ளார் மாணிக்கம் தாகூர்.

புகார் மனு
புகார் மனு

இது குறித்து மக்களவை சபாநாயகருக்கு மாணிக்கம் தாகூர் இன்று எழுதியுள்ள புகார் கடிதத்தில், ``இன்றைக்கு மக்களவையில் மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். வயநாடு மருத்துவக் கல்லூரி தொடர்பாகப் பேசுவதற்கு எங்கள் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி எம்.பி-க்கு நட்சத்திர கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பேசுவதற்கு மக்களவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், எங்கள் கட்சித் தலைவரின் நட்சத்திரக் கேள்விக்கு பதிலளிக்காமல் அரசியல் ரீதியான, அவதூறான, சம்பந்தமில்லாத விஷயங்களை அவையில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தார். அமைச்சரின் அந்தப் பேச்சு ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒன்று. எனவே, காங்கிரஸ் உறுப்பினர் என்ற முறையில் அவையின் மையப்பகுதிக்குச் சென்ற நான், தயவுசெய்து அந்தப் பேச்சை நிறுத்துங்கள் என்றும், ராகுல் காந்தியின் நட்சத்திரக் கேள்விக்கான பதிலை அளியுங்கள் என்றும் அமைச்சரிடம் வேண்டினேன்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்

அப்போது, பா.ஜ.க உறுப்பினர்கள் சிலர் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டார்கள். குறிப்பாக, பா.ஜ.க உறுப்பினரான பிரிஜ் பூஷன் சரண் சிங் என்னைத் தள்ளிவிட்டதுடன், என்னைக் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார். அவை நடவடிக்கையின் காணொலிப் பதிவுகளைச் சோதித்து, என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர். இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism