

கலைஞருக்கு சிறை ஒன்றும் புதிதல்ல... கோபாலபுரம் 'கோலாகல புரமான' அன்று...!
திருவாரூரிலிருந்து பதினைந்தாவது மைலில் உள்ள திருக்குவளை கிராமம், மணி விழா காணுகின்ற கலைஞர் கருணாநிதி பிறந்த ஊர்.
அங்கு அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இல்லத்தைக் காணச் சென்றோம்."தஞ்சை மாவட்டத்தில் அழகான சிற்றூர்களில் ஒன்று திருக்கோளிலி. திருக்குவளை என்றும் அதனை அழைப்பார்கள். எழில் நிறைந்த திருக்குளம் குளத்தைச் சுற்றி சோலை எதிரே சிவன் கோயில் மேற்கு எல்லையில் முனியன் தெற்கெல்லையில் ஐயனார் கோயில். இவையெல்லாம் நான் கண்ட திருக்குவளை. இப்போது அந்த அழகில் முக்கால் பகுதி குறைந்து விட்டது. என் தந்தையார் காலத்திலே மிகச் சிங்காரமாக இருந்த ஊர் இது..." என்று கலைஞர் திருக்குவளையைப் பற்றி நெஞ்சுக்கு நீதி நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
திருக்குவளை கிராமம், முன்னொரு காலத்தில் நிச்சயமாக அழகான சிற்றூராக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு இப்போது எஞ்சியிருக்கும் இயற்கைக் காட்சிகள் சான்றுகளாக இருக்கின்றன. "இதுதான் கலைஞர் பிறந்த இல்லம். கொஞ்சம் இருங்கள், போய் சாவி வாங்கி வருகிறேன்..." என்று கூறி விட்டு, எங்களுக்குக் கிராமத்தைச் சுற்றிக் காட்டிய திருக்குவளை தி. மு. க. செயலாளர் பாவாடைசாமி ஓடினார்.
ஊர் இளைஞர்கள் தங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவும் வகையில், ஒரு நூலகமாகவும் படிப்பகமாகவும் மாற்றி அந்த இல்லத்தைக் கிராம மக்களுக்கு தன்னுடைய காணிக்கையாக அளித்திருக்கிறார் கலைஞர்.
வெளியில், 'முத்துவேலர் நூலகம், அஞ்சுகம் படிப்பகம் (கலைஞர் மு. கருணாநிதி பிறந்த இல்லம்)' என்ற போர்டு நம்மை வரவேற்கிறது. நுழைந்தவுடன் வாயிற்புறத்தில் இருக்கும் ஒரு கல்வெட்டின் மூலம் 1972-ம் ஆண்டு ஜூன் மாதம் எட்டாம் தேதி ஆளுநர் கே.கே. ஷா இந்த இல்லத்தைத் திறந்து வைத்தார்' என்ற விவரம் தெரிகிறது.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP