Published:Updated:

சி.பி.எம்: இந்தியாவிலேயே முதன்முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாவட்டச் செயலாளராகத் தேர்வு!

பாரதி அண்ணா சி.பி.எம்
News
பாரதி அண்ணா சி.பி.எம்

சி.பி.எம் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக முதன்முறையாக 100 சதவிகிதம் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

சி.பி.எம் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக முதன்முறையாக 100 சதவிகிதம் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பாரதி அண்ணா சி.பி.எம்
பாரதி அண்ணா சி.பி.எம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் மாவட்டக்குழுவுக்கு புதிய செயலாளராக பாரதி அண்ணா என்ற வழக்கறிஞர் ஒருவர் தேர்வாகியுள்ளார். அவர் முழுப்பார்வை மாற்றுத்திறனாளி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தியாவிலேயே முழுப்பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர், ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளராகத் தேர்வாகி இருப்பது இதுவே முதன்முறை. இவருக்குப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

பாரதி அண்ணா சி.பி.எம்
பாரதி அண்ணா சி.பி.எம்

இது குறித்து சி.பி.எம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவிலேயே பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர், ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளராகத் தேர்வாகி செயல்பட முடியும் என்ற முன்னுதாரணத்தை வழங்கியிருக்கும் செங்கல்பட்டு மாவட்டக்குழுவுக்கும், மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணாவுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.